»   »  கலக்க வரும் தனிஷா!

கலக்க வரும் தனிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியை ஒரு காலத்தில் கதி கலக்கிய கஜோலின் தங்கை தனிஷா தமிழ்த் திரையுலகை திணறடிக்க உன்னாலேஉன்னாலே படம் மூலம் அறிமுகமாகிறார்.

புதுமுகம் வினய் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம்தான் உன்னாலே உன்னாலே. இப்படத்தின் முந்தையபெயர் ஜூலைக் காற்றில். இதில் வினய்க்கு ஜோடி போடுபவர் சதா. படத்தை இயக்குவது கேமராமேன் ஜீவா.

சதா கையில் இப்போது உள்ள ஒரே படம் இதுதான். இதனால் தனது முழுத் திறமையையும் முடிந்த அளவுக்குவெளிக்கொணர்ந்து நடித்து வருகிறாராம் சதா. இவர் தவிர இன்னொரு ஹீரோயினும் படத்தில் இருக்கிறார். இவர்வடக்கத்தி வல்லிய குட்டி. கஜோலின் தங்கச்சியான தணிஷாதான் 2வது ஹீரோயினாக நடிக்கிறார். இதில்இவருக்கு அருமையான ரோலாம். கிளாமரும் உண்டாம்.

குஷி படத்தைப் போல இந்தப் படம் படு குஷியா, ஜாலியான படமாக இருக்குமாம். இளசுகளைக் கவரும் பலஅம்சங்கள் படத்தில் இடம் பெறுகிறதாம். அதற்காக கிளாமர் மட்டுமே இருக்கும் என நினைத்து விடக் கூடாதுஎன்று வார்ன் செய்கிறார் ஜீவா.

இவர் இதற்கு முன்பு 12பி, உள்ளம் கேட்குமே என இரு படங்களை இயக்கியுள்ளார். உன்னாலே உன்னாலேபடத்தின் வசனத்தை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதுகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படத்தைத் தயாரிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இளமை துள்ளும் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மெல்போர்ன், சிட்னிஉள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான காட்சிகளை படமாக்குகிறார் ஜீவா. 2 பாடல்களை ஏவி.எம்.ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போட்டு சுட்டுள்ளனர்.

தணிஷாவுக்கு இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடம் என்று நம்பிக்கையாக சொல்கிறார் ஜீவா.

நம்பிக்கைதானே வாழ்க்கை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil