தனுஜா புகார்: தயாரிப்பாளர் திடீர் கைது இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக நடிகை தனுஜா கொடுத்த புகாரின் பேரில் தயாரிப்பாளர்பியாரிலால் குந்தாஷா திடீரென கைது செய்யப்பட்டார்.நடிகை தனுஜா தன்னை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்து விட்டதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் பேரைக் கூறி அவர்மிரட்டுவதாகவும் கடந்த மாதம் தயாரிப்பாளர் பியாரிலால் குந்தாஷா பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.இதுதொடர்பாக போலீஸிலும் அவர் புகார் கொடுத்தார். இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகை தனுஜா சென்னைதிருமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில், தன்னை இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளுமாறுகூறி பியாரிலால் மிரட்டுவதாக தனுஜா கூறியிருந்தார். ஆனால் இந்தப் புகாரை பியாரிலால் மறுத்திருந்தார்.இந்தச் சூழ்நிலையில் பியாரிலால் நேற்று இரவு அவரது மணலி பகுதி வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இரவோடுஇரவாக அவரை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குப் போலீஸார் கொண்டு வந்தனர்.அங்கு வைத்து பியாரிலாலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை அவரை எழும்பூர் நீதிமன்றத்தில்போலீஸார் ஆஜர்படுத்தக் கூடும் என்று தெரிகிறது.
இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக நடிகை தனுஜா கொடுத்த புகாரின் பேரில் தயாரிப்பாளர்பியாரிலால் குந்தாஷா திடீரென கைது செய்யப்பட்டார்.
நடிகை தனுஜா தன்னை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்து விட்டதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் பேரைக் கூறி அவர்மிரட்டுவதாகவும் கடந்த மாதம் தயாரிப்பாளர் பியாரிலால் குந்தாஷா பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீஸிலும் அவர் புகார் கொடுத்தார். இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகை தனுஜா சென்னைதிருமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில், தன்னை இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளுமாறுகூறி பியாரிலால் மிரட்டுவதாக தனுஜா கூறியிருந்தார். ஆனால் இந்தப் புகாரை பியாரிலால் மறுத்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் பியாரிலால் நேற்று இரவு அவரது மணலி பகுதி வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இரவோடுஇரவாக அவரை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குப் போலீஸார் கொண்டு வந்தனர்.
அங்கு வைத்து பியாரிலாலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை அவரை எழும்பூர் நீதிமன்றத்தில்போலீஸார் ஆஜர்படுத்தக் கூடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications