»   »  தனுஜாவை மிரட்டிய தயாரிப்பாளர் சிறையில் அடைப்பு நடிகை தனுஜாவை 2வது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர்பியாரிலால் குந்தாஷா 15 நாள் சிறைக் காவலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு படங்களுக்குப் பூஜை போட்டு அவற்றில் பெரும்பாலானவற்றை எடுத்து முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவரும் "பிரபல இயக்குனர், நடிகர் பாபுகணேஷால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஜா. சென்னை சட்டக் கல்லூரியில் படித்துள்ள தனுஜா, சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் மீது சமீபத்தில்தயாரிப்பாளர் பியாரிலால் குந்தாஷா ஒரு பரபரப்புப் புகாரைக் கூறினார். தன்னிடம் நெருக்கமாக பழகி விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டார் தனுஜா. பணத்தைக் கேட்டால் அமைச்சர்ஜெயக்குமாருடன் தனக்குள்ள நெருக்கத்தைக் கூறி மிரட்டுவதாக குந்தாஷா தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந் நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு குந்தாஷா மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் நடிகை தனுஜா புகார் கொடுத்தார்.அதில், 2 அடியாட்களுடன் குந்தாஷா வந்து தன்னை 2வது கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார் என்றும், திருமணம்செய்யாவிட்டால் பெயரைக் கெடுத்து விடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் கூறியிருந்தார் தனுஜா. இந்தப் புகாரின் பேரில் குந்தாஷாவை திருமங்கலம் போலீஸார் மணலியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அழைத்து வந்துஅண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையின் முடிவில், நேற்று (திங்கள்கிழமை) மாலை எழும்பூர் 5வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் குந்தாஷாவைஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பியாரிலால் சென்னைமத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். பியாரிலால் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை தனுஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பியாரிலால் குந்தாஷாவுக்கு சரியானதண்டனை கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் எனக்கு உதவிய நடிகர் விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுஅவர் கூறியுள்ளார்.

தனுஜாவை மிரட்டிய தயாரிப்பாளர் சிறையில் அடைப்பு நடிகை தனுஜாவை 2வது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர்பியாரிலால் குந்தாஷா 15 நாள் சிறைக் காவலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு படங்களுக்குப் பூஜை போட்டு அவற்றில் பெரும்பாலானவற்றை எடுத்து முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவரும் "பிரபல இயக்குனர், நடிகர் பாபுகணேஷால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஜா. சென்னை சட்டக் கல்லூரியில் படித்துள்ள தனுஜா, சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் மீது சமீபத்தில்தயாரிப்பாளர் பியாரிலால் குந்தாஷா ஒரு பரபரப்புப் புகாரைக் கூறினார். தன்னிடம் நெருக்கமாக பழகி விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டார் தனுஜா. பணத்தைக் கேட்டால் அமைச்சர்ஜெயக்குமாருடன் தனக்குள்ள நெருக்கத்தைக் கூறி மிரட்டுவதாக குந்தாஷா தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந் நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு குந்தாஷா மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் நடிகை தனுஜா புகார் கொடுத்தார்.அதில், 2 அடியாட்களுடன் குந்தாஷா வந்து தன்னை 2வது கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார் என்றும், திருமணம்செய்யாவிட்டால் பெயரைக் கெடுத்து விடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் கூறியிருந்தார் தனுஜா. இந்தப் புகாரின் பேரில் குந்தாஷாவை திருமங்கலம் போலீஸார் மணலியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அழைத்து வந்துஅண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையின் முடிவில், நேற்று (திங்கள்கிழமை) மாலை எழும்பூர் 5வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் குந்தாஷாவைஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பியாரிலால் சென்னைமத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். பியாரிலால் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை தனுஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பியாரிலால் குந்தாஷாவுக்கு சரியானதண்டனை கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் எனக்கு உதவிய நடிகர் விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுஅவர் கூறியுள்ளார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை தனுஜாவை 2வது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர்பியாரிலால் குந்தாஷா 15 நாள் சிறைக் காவலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்வேறு படங்களுக்குப் பூஜை போட்டு அவற்றில் பெரும்பாலானவற்றை எடுத்து முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவரும் "பிரபல இயக்குனர், நடிகர் பாபுகணேஷால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஜா.

சென்னை சட்டக் கல்லூரியில் படித்துள்ள தனுஜா, சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் மீது சமீபத்தில்தயாரிப்பாளர் பியாரிலால் குந்தாஷா ஒரு பரபரப்புப் புகாரைக் கூறினார்.

தன்னிடம் நெருக்கமாக பழகி விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டார் தனுஜா. பணத்தைக் கேட்டால் அமைச்சர்ஜெயக்குமாருடன் தனக்குள்ள நெருக்கத்தைக் கூறி மிரட்டுவதாக குந்தாஷா தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு குந்தாஷா மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் நடிகை தனுஜா புகார் கொடுத்தார்.அதில், 2 அடியாட்களுடன் குந்தாஷா வந்து தன்னை 2வது கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார் என்றும், திருமணம்செய்யாவிட்டால் பெயரைக் கெடுத்து விடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் கூறியிருந்தார் தனுஜா.

இந்தப் புகாரின் பேரில் குந்தாஷாவை திருமங்கலம் போலீஸார் மணலியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அழைத்து வந்துஅண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில், நேற்று (திங்கள்கிழமை) மாலை எழும்பூர் 5வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் குந்தாஷாவைஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பியாரிலால் சென்னைமத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

பியாரிலால் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை தனுஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பியாரிலால் குந்தாஷாவுக்கு சரியானதண்டனை கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் எனக்கு உதவிய நடிகர் விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுஅவர் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil