நடிகையிடம் காலா வில்லன் தவறாக நடந்ததற்கு ஆதாரம் இருக்கு: டாப்ஸி பரபரப்பு
மும்பை: தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக ஆதாரம் இருக்கிறது என்கிறார் நடிகை டாப்ஸி.
பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ புகார் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி அவர் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது, ஆதரவும் கிடைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து டாப்ஸி கூறியிருப்பதாவது,

தனுஸ்ரீ
சம்பவம் நடந்தபோதே பேசியிருக்க வேண்டியது தானே என்று நான் தனுஸ்ரீயிடம் கேட்க மாட்டேன். அவர் ஏற்கனவே இது குறித்து புகார் தெரிவித்திருக்கிறார். அவரை அமைதியாக்கிவிட்டனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தற்போது தனது குரலை உயர்த்தியுள்ளார்.
எனக்கு தனுஸ்ரீ மீதோ அவரின் நோக்கம் மீதோ சந்தேகமே இல்லை.

ஆதாரம்
சம்பவம் நடந்திருக்கிறது. அது நடந்தது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. அதனால் அவர் 10 ஆண்டுகள் கழித்தோ 40 ஆண்டுகள் கழித்தோ புகார் தெரிவிப்பது பெரிய விஷயம் இல்லை. இந்த சம்பவம் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் துணிச்சலாக பதில் அளித்து வருகிறார். அவர் செயலில் நேர்மை இருக்கிறது.

பெண்கள்
தனுஸ்ரீயை பார்த்து அவர் போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக பேச வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பலர் என்னிடம் தெரிவித்துள்ளனர். நான் என் மனதில் பட்டதை கூறுகிறேன். என்னால் போலியாக இருக்க முடியாது. என் மனசாட்சியை கொன்று வாழ முடியாது.

பயம்
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள், பேசுவார்கள் என்று பயந்து எல்லாம் என்னால் வாழ முடியாது. என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி தான் வாழ்வேன். அடுத்தவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுபவள் நான் இல்லை. என மனசு சுத்தமாக உள்ளதால் இரவில் நல்லபடியாக தூங்குகிறேன் என்கிறார் டாப்ஸி.

பொய்
தனுஸ்ரீயிடம் நான் தவறாக நடக்கவே இல்லை என்று நானா படேகர் கூறி வருகிறார். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அவர் கூறி வரும் நிலையில் அது நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக டாப்ஸி கூறியிருக்கிறார். நானா படேகர் தனுஸ்ரீக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











