ஓடி ஓடி உதவிய தான்யா ஹோப்… மனதார பாராட்டிய ரசிகர்கள் !

ஹைதராபாத்: நடிகை தான்யா ஹோப் கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக உணவளித்து வருகிறார்.

Recommended Video

FUN WITH TANYA HOPE | DHARALA PRABHU | V-CONNECT | FILMIBEAT TAMIL

மாதம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து பசியால் வாடும் ஏழைகளுக்கு தாராளமாக உணவளித்து வருகிறார்.

ஷைன் சில்டரன் ஹோம் என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் பொருளாதார ரீதியாக பல உதவிகளை செய்து வருகிறார். இவரின் இந்த சேவை குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அறிமுகம்

அறிமுகம்

மாடலிங் துறை பயிற்சியை புனேவில் பயின்றார் தான்யா ஹோப். இதன் பின் தெலுங்கு திரையுலகில் இருந்து கால் பதித்தார் இவர் நடித்த முதல் திரைப்படம் அப்பட்லோ ஒக்கடுன்டேவடு. அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை இவருக்கு பெற்றுத்தந்தது. இதையடுத்து இரண்டாவது திரைப்படத்தில், தான்யா ஹோப் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அருண் விஜய்யுடன்

அருண் விஜய்யுடன்

தெலுங்கு திரையுலகில் அறிமுகமான தான்யா ஹோப் அருண் விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த தடம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் மிகவும் அழுகு பதுமையான நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் தான்யா ஹோப்.

கன்னட படத்தில் அறிமுகம்

கன்னட படத்தில் அறிமுகம்

அதே ஆண்டு கன்னட திரையுலகில் தனது அறிமுகத்தை கொடுத்தார். கன்னட உச்ச நட்சத்திரமான தர்ஷன் நடித்த யாஜாமானா திரைப்படத்தில் நடித்தார் இதில் இவர் ஆடிய பஸ்சான்னி பா பாடல் கேட்டு குத்தாட்டாம் போடாத கால்களே கிடையாது. தடம் படத்தில் ஹோம்லியாக நடித்த தான்யா ஹோப், யாஜாமான படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

தாராள பிரபு படத்தில்

தாராள பிரபு படத்தில்

தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட படித்து வரும் இவர் ஹரீஷ் கல்யாணுடன் தாராள பிரபு படத்தில் நடித்திருந்தார். சமுக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

ஏழை மக்களுக்கு உணவு

ஏழை மக்களுக்கு உணவு

கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் யாருக்கும் தெரியாமல் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார் தான்யா ஹோப். மாதம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார் தான்யா ஹோப். இந்த திட்டத்தின் மூலம் சராசரியாக 200 நபர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.

தொண்டு நிறுவனம்

தொண்டு நிறுவனம்

தான்யா ஷைன் சில்டரன் ஹோம் என்கிற தொண்டு நிறுவனத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். அந்த தொண்டு நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் பொருளாதார ரீதியாகவும் பக்கபலமான பல உதவிகளை செய்து வருகிறார். தான்யாவின் இந்த சேவை மனபான்மைக்கு பல்வேறு பாராட்டு குவிந்து வருவதுடன், தான்யாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பல படங்களில்

பல படங்களில்

தான்யா ஹோப் Idha Maa katha என்ற தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் Home Minister என்ற கன்னட படம் ஒன்றிலும், குலசாமி என்ற படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப்படாத படம் ஒன்றில் தான்யா ஒப்பந்தமாகி உள்ளார். சுந்தர் சி தற்போது அரண்மனை 3 படத்தின் பணிகளை முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு பின் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X