திரையில் 10 ஆண்டுகளை கடந்த ஆடுகளம் நாயகி... தயாரிப்பாளராகிறார் டாப்சி
மும்பை : கோலிவுட்டில் ஆடுகளம் படம் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை டாப்சி.
டாப்சி தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
திரைத்துறையில் 10 ஆண்டுகளை கடந்துள்ள இவர், தற்போது புதிய தளத்தில் கால் பதித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆடுகளத்தில் அறிமுகம்
நடிகை டாப்சி தனுஷுடன் இணைந்து ஆடுகளம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர். அந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார் டாப்சி. சமீபத்தில் இவரது நடிப்பில் இந்தியில் வெளிவந்த ஹசீன் தில்ருபா படம் நெட்பிளிக்சில் வெளியானது.

அனபெல் சுப்ரமணியம் படம்
விக்ராந்த் மாசேவுடன் இவர் நடித்திருந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதியுடன் அனபெல் சுப்ரமணியம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தீபக் சுந்தர்ராஜன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளன.

ட்விட்டரில் அறிவிப்பு
திரைத்துறையில் 10 ஆண்டுகளை கடந்துள்ள டாப்சி, தற்போது அடுத்ததாக தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தான் திரைத்துறைக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என்றும் ஆனால் தற்போது தான் இதில் வெற்றிகரமான நடிகையாக வலம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனம்
தனக்கு அனைத்தையும் தந்துள்ள திரைத்துறைக்கு திரும்பவும் எதையாவது செய்ய வேண்டும் ஆவல் தனக்கு இருப்பதாகவும் அதனால் தற்போது அவுட்சைடர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளதாகவும் அதை வெற்றிகரமாக நடத்த அனைவரது வாழ்த்துக்களும் தேவை என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











