எனக்கும் கரன்ட் பில் அதிகம்.. மூணு மாசமா புதுசா எதையுமே வாங்கல.. நடிகை டாப்ஸி ஆவேசம்!

மும்பை: ஜூன் மாத கரன்ட் பில் தனக்கும் அதிகமாக வந்திருப்பதாக நடிகை டாப்ஸி பதிவிட்டுள்ள ட்வீட், மீண்டும் மின் கட்டண பிரச்சனையை கிளப்பி இருக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மக்கள் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் பலருக்கும் இதுபோன்ற அதிக மின் கட்டணம் வந்திருப்பது மக்கள் மனதில் கொந்தளிப்பையும், சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது.

ஒர்க் ஃப்ரம் ஹோம்

ஒர்க் ஃப்ரம் ஹோம்

நூறு நாளுக்கும் மேலாக பலரும் தங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதால், அவர்களுக்கு கரன்ட் பில் அதிகரித்து இருப்பதாக, பொதுமக்கள் எழுப்பிய சந்தேக குரல்களை மின் வாரியம் சமாளித்து இருந்தது. மேலும், பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பதால் தான் அதிக அளவு மின் பயன்பாடு அதிகரித்து மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாகவும் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

பிரபலங்கள் புலம்பல்

பிரபலங்கள் புலம்பல்

பொதுமக்களின் புலம்பல் சபைக்கு எடுபடாத நிலையில், நடிகர் பிரசன்னா, நடிகைகள் கார்த்திகா நாயர், ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்டோர் தங்களுக்கும் மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாக தங்களின் கரன்ட் பில்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இதில், ஏதோ முறைகேடு நடக்கிறது என குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஒரு லட்சம் பில்

ஒரு லட்சம் பில்

இதில், அதிகப்படியாக நடிகை கார்த்திகா நாயருக்கு ஒரு லட்சம் பில் வந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. தொடர்ந்து நடிகை ஷ்ரத்தா தாஸும் மும்பையில் தனது வீட்டு கரன்ட் பில் 26 ஆயிரம் ரூபாய் வந்திருப்பதாகவும், அதானி நிறுவனம் தான் இதற்கு காரணம் என்றும் ட்வீட் போட்டு சாடியிருந்தார்.

டாப்ஸி வீட்டிலும்

டாப்ஸி வீட்டிலும்

இந்நிலையில், நடிகை டாப்ஸி வீட்டு ஜூன் மாத கரன்ட் பில் 36 ஆயிரம் ரூபாய் வந்திருப்பதை பார்த்து ஷாக் ஆன அவர், அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு, இது எந்த மாதிரியான ஊழல் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். டாப்ஸியின் பதிவுக்கு கீழே பல நெட்டிசன்களும் தங்களுக்கும் இதே நிலைமை தான் என கூறி வருகின்றனர்.

புதுசா எதையும்

புதுசா எதையும்

கடந்த மூன்று மாதங்களாக லாக்டவுனில் இருப்பதால், புதிதாக எந்தவொரு மின் சாதனங்களையும் கூட தான் வாங்கவில்லை என்றும், பின்னர் எப்படி, இதுபோல எக்கச்சக்கமான கரன்ட் பில் வரும் என்றும், இதற்கு முறையான விளக்கத்தை சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் டாப்ஸி கொந்தளித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: tapsee டாப்ஸி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X