Tapsee - ஏங்க நான் இன்னும் கர்ப்பமே ஆகல அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்.. ஷாக் கொடுத்த டாப்சி

மும்பை: Tapsee (டாப்சி) இன்னும் கர்ப்பம் ஆகாததால் தற்போது திருமணத்திற்கு வாய்ப்பு இல்லை என டாப்சி கூறியிருக்கிறார்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது ஆடுகளம். அந்தப் படம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. ஆடுகளம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தனது நடிப்பை சிறப்பான முறையிலேயே வெளிப்படுத்தினார். அதனால் முதல் படத்திலேயே கோலிவுட்டின் கவனம் பெற்ற டாப்சிக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Tapsee Pannu Open Talks about her marriage

தமிழில் டாப்சி: ஆடுகளம் படத்துக்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் யார் கண் பட்டதோ தெரியவில்லை டாப்சிக்கு பட வாய்ப்புகள் தமிழில் பெரிதாக எதுவும் அமையவில்லை. இருப்பினும் தெலுங்கில் பல படங்களி நடித்தார். ஒருகட்டத்தில் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

பாலிவுட்டில் டாப்சி: சூழல் இப்படி இருக்க ஹிந்தி பக்கம் ஒதுங்கினார் டாப்சி. பேபி என்ற படத்தின் ஹிந்தியில் அறிமுகமான அவருக்கு பிங்க் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம்தான் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வையாக ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. பிங்க் படத்துக்கு பிறகு ரன்னிங் ஷாதி, ஜுட்வா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பயோபிக்கில் டாப்சி: அவரது ஹிந்தி கரியரில் பிங்க் படத்துக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது சபாஷ் மிது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. படத்தில் மிதாலி ராஜாக டாப்சி நடித்து பலரிடமும் அப்ளாஸை அள்ளினார். அவர் தற்போது டன்கி படத்தில் நடித்துவருகிறார். அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார்.

Tapsee Pannu Open Talks about her marriage

டாப்சியின் பதில்: இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் டாப்சி. அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த டாப்சி, "நான் இன்னும் கர்ப்பம் ஆகவில்லை. எனவே திருமணத்திற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை" என்றார். அவரது இந்த பதில் பலரையும் ஷாக்காக்கியிருக்கிறது.

ஏன் அப்படி சொன்னார்?: சமீபகாலமாக பாலிவுட்டில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது அதிகரித்துவருவதாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட நடிகை இலியானா திருமணம் செய்துகொள்ளாமல் கர்ப்பமாகியிருந்தார். அவரது பாய் ஃப்ரெண்டையும் சில நாட்களுக்கு முன்புதான் பொதுவெளியில் அறிமுகப்படுத்தியிருந்தார். எனவே பாலிவுட்டில் திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் ஆகும் கலாசாரத்தை குத்திக்காட்டும் விதமாகத்தான் அவர் அப்படி பதில் சொல்லியிருக்கிறாரோ என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X