For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதுக்கு நானும் ரெடி தான்.. நடிகை டாப்சி அதிரடி.. OTT ரிலீஸ் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

    |

    சென்னை: பாலிவுட், கோலிவுட் என கலக்கி வரும் நடிகை டாப்சி சம்பளக் குறைப்பு குறித்தும் நேரடி OTT ரிலீஸ் குறித்தும் தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து தேசிய விருதை அள்ளிய ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி.

    தற்போது, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், கோலிவுட்டிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

    'உங்க வீட்டுல வேலைக்குச் சேர்த்துக்கோங்களேன், ப்ளீஸ்..' பிரபல நடிகையிடம் கெஞ்சும் பாசக்கார ரசிகர்!'உங்க வீட்டுல வேலைக்குச் சேர்த்துக்கோங்களேன், ப்ளீஸ்..' பிரபல நடிகையிடம் கெஞ்சும் பாசக்கார ரசிகர்!

    தமிழில்

    தமிழில்

    ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் என தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார் நடிகை டாப்சி. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜன கன மண படத்திலும் இவர் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மீண்டும் தமிழ் சினிமாவில் டாப்சியின் தரிசனம் கிடைக்கவிருக்கிறது.

    கணவன் அறையலாமா

    கணவன் அறையலாமா

    மனைவியை அவளது கணவன் எந்தவொரு நேரத்திலும் அறையக் கூடாது என்பதை மையப்படுத்தி உருவான Thappad திரைப்படம் தியேட்டரில் வெளியான வேகத்திலேயே லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அமேசான் பிரைமில் வெளியான அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

    நானும் ரெடி

    நானும் ரெடி

    கோலிவுட் முதல் பாலிவுட் வரை தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிகளவில் சம்பளங்களை வாங்கும் நடிகர்கள் அவர்களது மார்க்கெட் ரேட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர். விஜய் ஆண்டனி உள்ளிட்ட நடிகர்கள் சம்பளத்தை குறைக்க முன் வந்திருக்கும் நிலையில், அதற்கு தானும் ரெடி என டாப்சி கூறியுள்ளார்.

    நேரடி OTT ரிலீஸ்

    நேரடி OTT ரிலீஸ்

    அமேசான் பிரைம் கிட்டத்தட்ட வரிசையாக பல படங்களை ஆன்லைனின் நேரடியாக ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதன் வெளியீட்டு தேதிகளையும் அறிவித்து இருக்கிறது. இந்நிலையில், நேரடி OTT ரிலீஸ் குறித்து என்ன சொல்றீங்க, என்ற கேள்விக்கு? இது காலத்தின் கட்டாயம். இந்த கடுமையான சூழலில் சிலர் பிழைக்க முடிகிறது என்றால் அது சந்தோஷம் தான் எனக் பளிச்சென பதிலளித்துள்ளார்.

    தியேட்டர் தொழில் பாதிக்காது

    தியேட்டர் தொழில் பாதிக்காது

    அதே போல இந்திய ரசிகர்கள் மத்தியில் என்றுமே தியேட்டருக்கான மதிப்பு குறையாது. தியேட்டரில் போய் பார்த்தால் தான் புதுப் படம் என்றும் அந்த கொண்டாட்டம் கிடைக்கும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நிலைமை சீரான பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டு அதன் தொழிலும் சிறப்பாகவே நடக்கும் என பதிலளித்துள்ளார்.

    நிறைய படங்கள்

    நிறைய படங்கள்

    நடிகை டாப்சி நடிப்பில் சமீபத்தில் தப்பட் திரைப்படம் வெளியானது. தொடர்ந்து, ஹசீன் தில்ருபா, ராஷ்மி ராக்கெட், லூப் லப்பெட்டா மற்றும் சபாஷ் மீத்து உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அந்த படங்களின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

    English summary
    Actress Tapsee Pannu reacts to pay cut, she said, she also ready to do that if needs, and OTT release never affects Theater Industry once they get opened.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X