பாலியல் தொல்லைக்கு எதிரான மிகப்பெரிய மீ டூ வெடிகுண்டு ‘பாம்ஷெல்’ படத்தில் டாப்ஸிக்கு என்ன வேலை?
மும்பை: பணிபுரியும் இடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைக்கு எதிராக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பாம்ஷெல் படம் வரும் ஜனவரி 3ம் தேதி இந்தியாவில் திரைக்கு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகளவில் மிகப்பெரிய புரட்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய மீ டூ இயக்கத்தை மையப்படுத்தி இந்த பாம்ஷெல் படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை டாப்ஸி, இந்த படத்தில் தனக்கும் ஒரு சிறிய பங்கு கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார்.

பாம்ஷெல்
ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளான சார்லிஸ் தெரான், மார்கட் ராபி, மேகின் கெல்லி, நிக்கோல் கிட்மேன் இணைந்து நடித்துள்ள படம் தான் பாம்ஷெல். ஹாலிவுட்டில் இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை
வேலை செய்யும் இடங்களில் பெண்ணுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை தோலுரித்துக் காட்டியுள்ள இந்த படத்திற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் ஜோ ரோச் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜனவரி 3ம் தேதி லயன்ஸ்கேட் இந்தியா சார்பில் இந்தியாவில் ரிலீசாகிறது.
டாப்ஸி ட்வீட்
வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை தோலுரித்துக் காட்டியுள்ள இந்த படத்தை இந்தியாவில் வெளியிட முன்வந்த லயன்ஸ்கேட் இந்தியாவிற்கு மிகப்பெரிய நன்றி என்றும், இந்த படத்தில் தனக்கும் சிறு பங்கு கொடுத்ததற்கு மகிழ்ச்சி என்றும் டாப்ஸி தெரிவித்துள்ளார்.
Recommended Video
என்ன பங்கு?
ஹாலிவுட் படமான பாம்ஷெல் படத்தில் நடிகை டாப்ஸி நடிக்கவில்லை. இந்தியாவில் படம் இந்தி மொழியில் வெளியாகிறாதா? அதற்கு நீங்கள் டப்பிங் கொடுத்துள்ளீர்களா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ரசிகர்களுக்கு பதில் அளிக்காமல் அந்த சர்ப்ரைஸை சஸ்பென்சாக வைத்துள்ளார் டாப்ஸி.

மீ டூ விவகாரம்
இந்தியாவிலும் மீ டூ விவகாரம் விஸ்வரூப பிரச்சனை எடுத்துள்ளது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்களின் பெயர்கள் இந்த இயக்கத்தின் மூலமாக வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. பாம்ஷெல் படம் இந்தியாவில் அனைத்து மொழிகளில் வெளியானாலும், நல்ல வசூலையும் வரவேற்பையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











