என் தங்கை நடிக்க வர்றா: டாப்ஸி
சென்னை: டாப்ஸியின் தங்கை ஷாகுன் விரைவில் நடிக்க வருகிறாராம்.
பஞ்சாபைச் சேர்ந்த டாப்ஸி தமிழில் ஆடுகளம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் அவ்வப்போது நடிக்கும் டாப்ஸி தெலுங்கில் கவர்ச்சி ராஜ்ஜியமே நடத்துகிறார். ஊத்துக்குளி வெண்ணெயில் செய்தது போன்று இருக்கும் அவர் மினிமம் டிரஸ் போட்டு ஆந்திர ரசிகர்களுக்கு மேக்சிமம் மகிழ்ச்சி அளிக்கிறார்.
டாப்ஸி தற்போது அஜீத் குமார், ஆர்யா, நயன்தாரா நடிக்கும் வலை படத்தில் நடித்து வருகிறார்.

என் தங்கை நடிக்க வருகிறாள்
அக்கா டாப்ஸியின் வழியில் ஷாகுன் பண்ணு நடிகையாகவிருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை பார்க்கும் அவர் விரைவில் திரைத்துறைக்குள் நுழையவிருக்கிறார்.

படம் தேர்வு செய்ய தங்கைக்கு உதவுவேன்
என் தங்கையைத் தேடி வருகிற படங்களில் அவளுக்கு பொருத்தமான படத்தை தேர்வு செய்த அவளுக்கு உதவி செய்வேன் என்றார் டாப்ஸி.

நல்ல பெயர் வாங்குவது ஷாகுன் சமத்து
திரைத்துறையில் நல்ல பெயர் எடுப்பது ஷாகுனின் சாமர்த்தியம். அது அவள் கையில் தான் உள்ளது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

யாரா இருந்தாலும் டாப்ஸி சமாளிப்பா
அனுஷ்கா, சமந்தா, காஜல் என்று போட்டிக்கு ஆள் இருக்கையில் தங்கை வேறா என்று கேட்டதற்கு, யாரா இருந்தாலும் டாப்ஸி சமாளிப்பா என்று தில்லாக பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











