ஏன் அப்படி பண்றேன்? மித்தாலி ராஜ் டாப்ஸியிடம் சொன்ன ரகசியம்

By

மும்பை: மித்தாலி ராஜின் கவர் டிரைவ் ஷாட்டை கற்றுக்கொள்ள சிரமமாக இருக்கிறது என்று நடிகை டாப்ஸி சொன்னார்.

பிரபலங்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவது இப்போதை டிரெண்ட். அந்த வரிசையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் வாழ்க்கைக் கதையும் படமாகி வருகிறது. மித்தாலி ராஜ் கேரக்டரில் நடிக்கிறார் டாப்ஸி.

சபாஷ் மித்து என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வயாகாம்18 ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தான், வித்யாபாலனின் கஹானி, கங்கனா ரனவத் நடித்த குயின், பிரியங்கா சோப்ராவின் மேரி கோம், தீபிகா படுகோனின் பத்மாவத் படங்களை தயாரித்திருந்தது. அதாவது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தயாரித்திருந்தது.

பர்ஸானா இயக்குனர்

பர்ஸானா இயக்குனர்

இந்தப் படத்தை ராகுல் தோலக்கியா இயக்குகிறார். இவர் ஏற்கனவே பர்ஸானா, மும்பை கட்டிங், லம்ஹா, ராயிஸ் ஆகிய இந்திப் படங்களை இயக்கியவர்.

எனக்கு பெருமை

எனக்கு பெருமை

மித்தாலி கதையில் நடிப்பது பற்றி டாப்ஸி கூறும்போது, இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு மித்தாலியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அந்த அணியை மாற்றியவர் அவர். இதில் நடிக்கும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார் டாப்ஸி.

கவர் டிரைவ் ஷாட்

கவர் டிரைவ் ஷாட்

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், மித்தாலி ராஜ் அடிக்கும் கவர் டிரைவ் ஷாட்டை கற்றுக்கொள்வது சவாலாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, 'ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டபோது, அவர் சொன்ன பதிலில் இருந்து அவரை எனக்கு நெருக்கமானவராகப் புரிந்துகொண்டேன். இந்த கேள்வியை ஆண் கிரிக்கெட் வீர்ர்களிடம் கேட்க வேண்டியதுதானே என்று கூறியிருந்தார், அவர்.

புத்தகம் வாசிப்பது

புத்தகம் வாசிப்பது

மேட்ச் நடந்துகொண்டிருக்கும்போது, அவர் அமைதியாக உட்கார்ந்து அவர் புத்தகம் படித்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். இதுபற்றி அவரை சந்தித்தபோது கேட்டேன். அந்த ரகசியத்தை அவர் என்னிடம் சொன்னார். டக் அவுட் ஆகி வந்தபின் பீதி அடைவதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? அதனால் நடப்பது நடக்கட்டும் என்று புத்தகம் படிப்பேன் என்று சொன்னார். அதுதான் உண்மை.

நகம் கடிப்பேன்

நகம் கடிப்பேன்

நானாக இருந்தால், நகத்தைக் கடித்தபடி டென்ஷனாக இருப்பேன். மித்தாலி ராஜ் தமிழ்ப் பெண். ஜோத்பூரில் பிறந்து ஐதராபாத்தில் வாழ்கிறார். அவர் வாழ்க்கைக் கதையில் நடிப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X