கேவி ஆனந்த் படத்தில் டாப்ஸி இல்லை!

ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர் டாப்ஸி. மும்பையைச் சேர்ந்தவர். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் வந்தன.
ஆனால் ஆரம்பத்தில் அவரை போட்டி போட்டு ஒப்பந்தம் செய்த அனைவருமே, போகப் போக அவரை வேண்டாம் என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது கே வி ஆனந்த் இயக்கும் மாற்றான் படத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இந்தப் படம் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் உள்ள கதை. அதில் நடிக்கும் அளவு டாப்ஸியின் உடல்மொழி இல்லை என்று கூறி அவர் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இப்போது வேறு நடிகையைத் தேடி வருகிறார் கேவி ஆனந்த்.


Click it and Unblock the Notifications











