»   »  ரெண்டு தாரிகா!

ரெண்டு தாரிகா!

Subscribe to Oneindia Tamil

மீண்டும் வருகிறார் நாட்டுச் சரக்கு தாரிகா.

நிஷா என்ற இயற்பெயரைக் கொண்ட தாரிகா, ஆரம்பத்தில் டிவி சீரியல்களில்நடித்துக் கொண்டிருந்தார். அப்படியே சைடுவாக்கில் கன்னடப் படங்களிலும் தலைமற்றும் உடலைக் காட்டினார். அங்கு அவர் நடித்த படங்கள் எல்லாமே பலான பலானரேஞ்சுக்கு இருந்ததால் கவர்ச்சி தாரகையாக மாறினார் தாரிகா.

ஆனால் தமிழில் மட்டும் நடிக்காமல் இருந்து வந்தார் தாரிகா. டிவி சீரியல்களிலேயேமுழுக்க முழுக்க கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால், தமிழ் சினிமா பக்கம்தலையை காட்டாமல் இருந்து வந்தார்.

அந்த நேரத்தில் தான் தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்திற்குகுத்தாட்டம் போட வாய்ப்பு வந்தது. ஏற்கனவே கன்னடப் படங்களில் கிளாமராகநடித்த அனுபவம் இருந்ததால் இந்த வாய்ப்பை தட்ட விரும்பவில்லை தாரிகா.


நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு என்று தனுஷுடன் தண்ணீரில் குத்தாட்டம்போட்டார் தாரிகா. இந்தப் பாட்டும், தாரிகாவின் கிளாமரும் பிரபலமான அளவுக்குபடம் போணியாகவில்லை.

இதனால் தாரிகாவுக்கும் புதுப் படம் ஏதும் வரவில்லை. இதனால் குழம்பிப் போனதாரிகா மீண்டும் டிவிக்கே திரும்பினார். மறுபடியும் அடக்கம், ஒடுக்கமாக டிவிபொட்டியை வலம் வந்து கொண்டிருக்கும தாரிகாவுக்கு அருமையான ஒரு வாய்ப்புவந்துள்ளது.

ரீமா சென் நடிக்கும் ரெண்டு படத்தில் அவரது தோழியாக நடிக்கிறாராம் தாரிகா. இதுகிளாமரான ரோல் இல்லை என்றாலும் கூட பேசப்படும் அளவுக்கு நல்ல ரோலாம்.அதனால் ஒத்துக் கொண்டு நடித்து வருகிறார் தாரிகா.

நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன், இனிமேல் கிளாமர்கிடையாது, அதை மறந்து விட்டேன் என்கிறார் தாரிகா.
Read more about: tarika in rendu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil