»   »  ஜோதிகா, லட்சுமி மேனன்... தமிழ் சினிமாவில் மனதைக் கவர்ந்த ஆசிரியைகள்

ஜோதிகா, லட்சுமி மேனன்... தமிழ் சினிமாவில் மனதைக் கவர்ந்த ஆசிரியைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரைப்படங்களில் ஆசிரியர் - மாணவர்கள் உறவை விளக்கும் விதமாக பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அன்பை உணர்த்தும் ஆசிரியர்கள், கண்டிப்பை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் என பள்ளிக்கால ஆசிரியர்களை கண்முன் நிறுத்துவார்கள்.

சுந்தகாண்டம் படத்தில் ஆசிரியராக வாழ்ந்த பாக்கியராஜ், நம்மவர் படத்தில் நட்பு பாராட்டிய கமல்ஹாசன், ரமணாவில் கண்டிப்பு காட்டும் விஜயகாந்த். சாட்டை படத்தில் மாணவர்களுக்கு வாழ்வியலைப் புரியவைத்த சமுத்திரகனி என பல ஆசிரியர்களை கண் முன் நிறுத்தியுள்ளது தமிழ் சினிமா.

அதேபோல அன்பான கண்டிப்பு கலந்த டீச்சர்கள் மீது ஒருவித பாசம் மாணவர்களுக்கு இயல்புதான். தமிழ் சினிமாவில் ஆசிரியைகள் வேடத்தில் அசத்திய நடிகைகளைத் தெரிந்து கொள்ளுங்களேன்.

ஜெனிபர் டீச்சர்

ஜெனிபர் டீச்சர்

கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிபர் டீச்சராகவே வாழ்ந்திருப்பார் நடிகை ரேகா. கையில் குடையோடு அதே டிராட் மார்க் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பார் பாரதிராஜா.

காக்க காக்க

காக்க காக்க

அழகான இளமையான மாணவர்களுக்குப் பிடித்த டீச்சராக காக்க காக்க படத்தில் அசத்தியிருப்பார் ஜோதிகா.

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

கிராமத்து பள்ளியில் ஏழை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் எளிமையான டீச்சராக வாழ்ந்திருப்பார் சிநேகா.

பாண்டியநாடு

பாண்டியநாடு

ப்ளஸ் 1 படிக்கும் போதே பள்ளியில் வகுப்பெடுக்கும் ஆசிரியையாக பாண்டியநாடு படத்தில் அசத்தியிருப்பார் லட்சுமி மேனன்

ஏகன் நயன்தாரா

ஏகன் நயன்தாரா

ஏகன் படத்தில் அழகான இளமையான கல்லூரி பேராசியையாக அசத்தியிருப்பார் நயன்தாரா.

English summary
Tamil cinema industry have given many colourful movies, which talks about teacher and student relationship.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil