நடிகை தேஜாஸ்ரீ

By Staff

பாபுகணேஷ் தயாரிப்பு பிளஸ் இயக்கத்தில் நடிகை என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. புகழின் உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போன நடிகைகள் குறித்த கதையாம் இது.

அடுத்தடுத்து பல படங்களுக்குப் பூஜை போட்டு விட்டு அத்தோடு விட்டு விடும் அருமையான கலைஞர் பாபு கணேஷ். இவர் எடுத்த படங்களை விட பூஜை போட்டு பாதியில் அத்து விடப்பட்ட படங்களின் எண்ணிக்கைதான் ஜாஸ்தி.

அப்படியாப்பட்ட பாபு கணேஷ் தற்போது நடிகை என்ற பெயரில் புதுப் படத்தை ரொம்ப நாட்களாக இயக்கி வருகிறார். இவரேதான் கதாநாயகனும் கூட.

ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி, மோனல், பிரதியுக்ஷா, திவ்யபாரதி ஆகியோரைப் பற்றி இப்படத்தில் சொல்கிறாராம் பாபு கணேஷ். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் தேஜாஸ்ரீ.

பரதம் மற்றும் கதக் கலைஞராக சிறந்து விளங்கும் தேஜாஸ்ரீ பின்னர் நடிகையாக மாறுகிறார். அதன் பின்னர் அவர் சந்திக்கும் பிரச்சினைகள், இன்னல்களை படமாக்குகிறாரம் பாபு கணேஷ்.

மறைந்த நடிகைகளின் சாயல் கொண்ட பல நடிகைகளையும் இப்படத்தில் நடிக்க வைக்கிறாராம் பாபு கணேஷ்.

படத்தில் கிளாமர் கிளுகிளுப்புக்கு பஞ்சம் இல்லையாம். தேஜாஸ்ரீயே கூட சில கிளுகிளுப்பான ஆட்டங்களைக் கொடுத்துள்ளாராம். இந்தியில் வெளியாகி பிரபலமடைந்த சோளி கீ பீச்சே கியாஹை பாடலை இப்படத்தில் ரீமேக் செய்து சரியான குத்துப்பாட்டாக மாற்றியுள்ளனராம்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இலங்கைக்குப் போய் எடுக்கவுள்ளாராம் பாபு கணேஷ்.

படம் எப்ப முடியும், எப்ப வெளியாகும் என்பது பாபு கணேஷுக்குத் தெரியாதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X