»   »  தேஜாஸ்ரீ இப்போ ரொம்ப பிஸி!!

தேஜாஸ்ரீ இப்போ ரொம்ப பிஸி!!

Subscribe to Oneindia Tamil

நான் சின்ன வீடா வரட்டுமா என்று கேட்டு டென்சன் கொடுக்க தேஜாஸ்ரீக்கு இப்போ ரொம்ப பிஸி.

சினிமா மட்டுமல்ல, ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் இவரை இழுத்துக் கொண்டு போகிறார்கள். அத்தோடு ஏற்றுமதிநிறுவனங்களின் விளம்பரங்களில் முழு தரிசனம் தந்தும் நல்ல காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது என் கண்ணில் ஏன் விழுந்தாய், சொல்லி அடிப்பேன் ஆகிய இரு தமிழ்ப் படங்களிலும் 2 தெலுங்குப் படங்களிலும்நடித்து (!!) கொண்டிருக்கிறார். அத்தோடு பாலு மகேந்திராவின் படத்தில் சிங்கிள் டான்சுக்கு ஆடப் போகிறார்.

அர்ஜூனுடன் நடித்த முதல் படமான ஒற்றனைத் தொடர்ந்து எல்லோரும் அதே ரேஞ்சில் ஒரு பாட்டுக்கு தமுக்காட்டம் போடவேகூப்பிட்டுக் கொண்டிருந்ததால் கோபமான தேஜாஸ்ரீ, ஆந்திரா பக்கம் போய் வாய்ப்பு தேடினார்.

அங்கு ஒரே ஒரு படத்தில் ஹீரோயினாகவும் மற்ற 3 படங்களிலும் ஹீரோவுக்கும் ரசிகர்களுக்கும் குஜாலூட்டும் ஒரு பாட்டுக்குமட்டும் ஆடிக் கலக்கும் (களைக்கும்) வேடங்களே கிடைக்க, வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார். அதே நேரம் ரேட்டைமட்டும் கொஞ்சம் கூட்டினார்.

இந் நிலையில் தான் தமிழ்ல் மதுர படத்தில் வாய்ப்பு வந்தது. அதில் விஜய்க்கு ஜோடியாக செகண்ட் ஹீரோயின் ரோல் என்றதும்தெலுங்கை அப்படியே விட்டுவிட்டு தமிழுக்கு ஓடி வந்தார். ஆனால், இவரைவிட இரு மடங்கு சுற்று கொண்ட இன்னொருஹீரோயினான தூண் ரக்ஷிதா இவரை படத்தில் ஏகத்துக்கும் மறைத்துவிட்டார்.


அந்தக் கோபத்தில் இருந்த தேஜாஸ்ரீக்கு விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தது. ஆனால்இங்கும் செகண்ட் ஹீரோயின் ரோலே.

ரக்ஷிதாவிடம் தோற்றது மாதிரி இங்கும் தோற்றுவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, மன்மத ராணி சாயா சிங்குடன்சரிக்கு சரியாக முட்டி மோதி கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார் தேஜாஸ்ரீ.

அதே நேரத்தில் தெலுங்கை இவர் விட்டுவிட்டு வந்தாலும், அவர்கள் இவரை விடவில்லை. 2 தெலுங்குவாலாக்கள் தங்கள்படங்களில் கட்டவிழ்க்கும் அழகுப் புரட்சி செய்ய வருமாறு சொல்லி அட்வான்ஸ் கொடுத்துவிட்டுப் போய்விட்டனர். இதனால்வாரத்தில் 2 நாட்கள் ஹைதராபாத் மற்ற நாட்களில் தமிழ் சூட்டிங் என்று பிஸியாக சுழன்று கொண்டிருக்கிறார் தேஜாஸ்ரீ.

அத்தோடு பல நாடுகளிலும் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் இவரை தவறாமல் புக் செய்துவிடுகிறார்கள். தமிழ், தெலுங்குபாடல்களுக்கு இவர் போடும் ஆட்டத்துக்கு நல்ல மவுசு இருப்பதால் ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் வரை பேசி இழுத்துச்செல்கின்றனர். அந்த வகையில் இவருக்கு நல்ல வரும்படியாம்.

கலை நிகழ்ச்சி என்றால், சூட்டிங் இருந்தாலும் கேன்சல் செய்துவிட்டுப் போய்விடுகிறார்.

இந் நிலையில் தனுஷ்-ப்ரியா மணி நடிக்கும் அது ஒரு கனாக்காலம் படத்தில் ஒரு அழகான பாடலுக்கு ஆட வருமாறு பாலுமகேந்திரா அழைக்க அந்த வாய்ப்பை தட்டாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தேஜாஸ்ரீ.

இதைத் தவிர இன்னொரு வகையிலும் தேஜா காசு பார்க்கிறார். அது மாடலிங். ஆடை ஏற்றுமதி நிறுவனங்களின் விளம்பரங்களில்கொஞ்சமே கொஞ்சமே ஆடையை மேலே போட்டுக் கொண்டு, நல்ல தரிசனம் தந்து கலக்கி எடுத்து வருகிறார்.

இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்த இலங்கை நட்சத்திர ஹோட்டல்காரர்கள், தங்களது விளம்பரத்திலும் நடிக்க தேஜாவைகொழும்புவுக்கு அழைத்துச் சென்றார்களாம். 5 நாட்கள் தங்க வைத்து தேஜாவை கேமராக்களால் சுட்டார்களாம். இதில் பெரும்பணம் கிடைத்துள்ளது.

இதனால் ஏஜென்சிகள் மூலம் இதுபோன்ற லம்ப்சம் வெளிநாட்டு ஆபர்களுக்கு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்தேஜாஸ்ரீ.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil