»   »  தேஜாஸ்ரீக்கு அடைக்கலம் தந்த ராணி

தேஜாஸ்ரீக்கு அடைக்கலம் தந்த ராணி

Subscribe to Oneindia Tamil

சென்னையில் வீடு தேடித் தேடி தேஜாஸ்ரீ அலுத்துவிட்டாராம்.

மும்பையைச் சேர்ந்த தேஜாஸ்ரீ தெலுங்கு மூலமாக தமிழுக்கு வந்தார். சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்றுகேள்வி கேட்டு ரசிகர்களின் இதயத்தில் குடியேறினார்.

இப்போது நீயே நிஜம் (பழைய பெயர்: என் கண்ணில் ஏன் விழுந்தாய்) என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இதில் தேஜாஸ்ரீயின் கவர்ச்சிக்கு இணையாக பார்வையாலேயே அனைவரையும் சுண்டி இழுக்க சின்னத் திரை நடிகை மஞ்சரியும்இருக்கிறார்.

இந்தப் படம் தவிர அது ஒரு கனாக் காலம் படத்தில் தனுசுக்கு மன்மத பாடம் சொல்லித் தரும் ரோலிலும், நண்பன்எம்பிபிஎஸ்என்ற படத்தில் செகண்ட் ஹீரோயினாகவும், மேலும் சில தெலுங்கு, தமிழ்ப் படங்களில் குத்து டான்ஸ்களும் ஆடிக்கொண்டிருக்கிறார் தேஜாஸ்ரீ

இந் நிலையில் தேஜாஸ்ரீக்கு ஒரு பிரச்சனை. மும்பையைச் சேர்ந்த தேஜாஸ்ரீ தெலுங்கு மூலமாக தமிழுக்கு வந்தவர். இதுவரைமும்பையில் இருந்து தான் வந்து போய்க் கொண்டிருந்தார்.

சென்னை வந்தால் தங்குவதற்கு என தயாரிப்பாளர்கள் தலையில் பிட்டைப் போட்டு பெரிய அமெளன்டை கறந்து வந்தார்.

இவருக்கு நட்சத்திர ஹோட்டலில் ரூம் போடவும், விமான டிக்கெட் எடுக்கவும், உ.பா உள்ளிட்டவற்றுக்கும் முதலில் சுணங்காமல்செலவு செய்த தயாரிப்பு பார்ட்டிகள் பின்னர், இந்தச் செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன் என்று கூறஆரம்பித்துவிட்டன.

ரூம் பிரச்சனைக்காக சண்டை போட்டால் குத்து டான்ஸ் வாய்ப்புகளும் போய்விடும் என்பதால், இந்தச் செலவுகளை தானேஏற்பதாகச் சொல்லிவிட்டுத் தான் இப்போதெல்லாம் வாய்ப்பே கேட்டு வருகிறார் தேஜாஸ்ரீ.

சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் தங்கி காசு செலவு செய்தபோது தான் வலி தெரிந்தது. இதையடுத்து சென்னையிலேயே வீடுபார்க்க ஆரம்பித்தார். ஆனால், குத்தாட்ட நடிகை என்பதாலும் வீட்டுக்கு ஆட்கள் வருவது போவது அதிகம் இருக்கும்என்பதாலும் அவ்வளவு சீக்கிரத்தில் தேஜாஸ்ரீக்கு வீடு கிடைத்துவிடவில்லை.

சாலிக்கிராமத்தில் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்குப் பிடித்து குடியேறிய தேஜாஸ்ரீக்கு அந்த இடம் ஒத்து வரவில்லை. ஆட்கள்வர போக பிரைவஸி இல்லையாம்.

இதனால் என்ன செய்வது என்று குழம்பிய தேஜாஸ்ரீயை தானே தேடி வந்து தனது வீட்டில் குடியேற்றிவிட்டார் காதல்கோட்டைவெள்ளரிக்கா.. பிஞ்சு வெள்ளரிக்கா டான்ஸ் புகழ் ராணி.

ராணிக்கு இப்போது சினிமா வாய்ப்புக்கள் ஏதுமில்லை. சில மலையாள, தெலுங்கு ஹாட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


தனது சக நடிகை வீடு விஷயத்தில் கஷ்டப்படுவது தாங்க முடியாத ராணி இப்போது தேஜாவை உடன் வைத்துக்கொண்டிருக்கிறார்.

சீக்கிரத்திலேயே சென்னையில் ஒரு வீடு வாங்கிவிடும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் தேஜாஸ்ரீ.

சின்ன வீடா வாங்குவீங்களா.. இல்ல பெரிய வீடா வாங்குவீங்களா மேடம்?

Read more about: tejasree stays with rani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil