»   »  தேஜாஸ்ரீயும், வயசுப் பசங்களும்!

தேஜாஸ்ரீயும், வயசுப் பசங்களும்!

Subscribe to Oneindia Tamil
அங்கிட்டும், இங்கிட்டுமாக தடுமாறிக் கொண்டிருக்கும் தேஜாஸ்ரீ, தனதுமார்க்கெட்டை சூடு பிடிக்க வைப்பதற்காக வாய்ப்பு தேடி தீவிர முயற்சிகளைதொடங்கியுள்ளார்.

குத்துப் பாட்டுக்கு ஆடியதால் தொடர்ந்து அதே மாதிரியான வாய்ப்புகளே வரவெறுத்துப் போனவர் தேஜாஸ்ரீ. தன்னைத் தேடி வந்த குத்துப்பாட்டு வாய்ப்புகளைஆரம்பத்தில் ஒத்துக் கொள்ள ஆரம்பித்த தேஜா,பின்னர் இப்படியே போனால் குத்திக்குத்தியே ஓரம் கட்டி விடுவார்கள் என்று பயந்து போய் ஒரு கட்டத்தில் ஸாரி சொல்லஆரம்பித்தார்.

இனிமேல் நடித்தால் ஹீரோயினாகத்தான். அது 2 ஹீரோயின் சப்ஜெக்ட்டாகஇருந்தாலும் பரவாயில்லை என்று தேஜாஸ்ரீ ஸ்டேட்மெண்ட் கொடுக்க வந்த பலகுத்து வாய்ப்புகளும் திரும்பிப் போய் விட்டன.

தனி ஹீரோயின் வாய்ப்புக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவானபோது தான்விவேக்கின் சொல்லி அடிப்பேன் படத்தில் ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது. அது 2ஹீரோயின் சப்ஜெக்ட். ஆனாலும் ஒத்துக் கொண்டு நடித்தார் தேஜா.

என்ன நேரமோ, படம் வளரவே இல்லை. அப்படியே தொங்கிப் போய் நிற்கிறது.இந்தப் படத்துக்குப் பின்னர் வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசியிலும்,வடிவேலுவுக்கு ஒரு ஜோடியாக நடித்தார் தேஜா.

அந்தப் படம் ரிலீஸாகி சக்ஸஸாக ஓடுவதால் தேஜா சந்தோஷமடைந்துள்ளார்.தொடர்ந்து எப்படியாவது ஹீரோயினாகவே நடித்துக் காலத்தைக் கழித்து விடுவதுஎன்ற தீவிர முடிவில் இருக்கிறார்.

புதிதாக ஒரு ஆல்பத்தை ரெடி செய்துள்ள தேஜாஸ்ரீ அதை தனது பி.ஆர்.ஓ மூலம்உலவ விட்டுள்ளார். அத்தோடு தயாரிப்பாளர்களுக்கும் தானே போன் செய்து வாய்ப்புதேடி வருகிறார்.

கிளாமர் பிரச்சினை இல்லை, ஆனால் ஹீரோயின் வாய்ப்புதான் வேண்டும் என்பதுமட்டுமே தேஜாஸ்ரீ போடும் ஒரே கண்டிஷன்.

தேஜாஸ்ரீ இப்போது தனது அம்மாவுடன் சாலிகிராமத்தில் ஒரு ஃபிளாட்டில்குடியிருந்து வருகிறார்.

இருவர் மட்டுமே தங்கியிருப்பதால் வங்கிக்குப் போவது, கடைக்குப் போவது எனசின்னச் சின்னச் சில்லறை வேலைகளுக்கு தேஜாஸ்ரீயால் சரியாகப் போகமுடியவில்லையாம்.

இதனால் என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்த தேஜாஸ்ரீக்கு சூப்பர் ஐடியாவந்தது. தனது ஃபிளாட்டில் இருக்கும் மீசை அரும்ப ஆரம்பித்துள்ள சில சின்னப்பசங்களை தோழர்களாக்கிக் கொண்டார்.

இப்போது அவர்கள் அடிக்கடி தேஜாஸ்ரீ வீட்டுக் கதவைத் தட்டி மை ஐ ஹெல்ப் யூஎன்று கேட்டுக் கேட்டு வேலைகளை செய்து தேஜாவுக்கு அனுகூலமாகஇருக்கிறார்களாம்.

தேஜாஸ்ரீ நடிகை மட்டுமல்ல, வேலை வாங்கத் தெரிஞ்ச நல்ல வேலைக்காரிதான்போல!

Read more about: tejasris new attempts

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil