பிகினி ஆனந்த குளியல்.. கடலை சூடாக்கிய பிரபல நடிகை!
ஹைதராபாத் : கடற்கரையில் குட்டி சும்மிங் ஃபூலில் பிகினி உடையில் ஆனந்த குளியல் போட்டவாறு இளமை துள்ளலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தெலுங்கு நடிகை தேஜஸ்வி மடிவாடா.
Recommended Video
தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் தேஜஸ்வி அதேசமயம் வெப்சீரிஸ்களிலும் ஓரிரு தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
கொள்ளை அழகை கொண்டு ரசிகர்களை கொள்ளை அடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தேஜஸ்வி மடிவாடா லாக்டவுனில் வெளியில் எங்கும் சுற்ற முடியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் பல்வேறு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர் இப்பொழுது, கடற்கரையில் பிகினி உடையில் ஆனந்தமாக குளித்தவாறு த்ரூ பேக் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் கடலையும் சூடாக்கி வருகிறார்.

தெலுங்கில் பிரபலமாக
நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் கைதேர்ந்தவரான தேஜஸ்வி மடிவாடா தெலுங்கில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்தவாறு மிகப் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நம்பிக்கைக்குரிய கதாநாயகியாக
சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு, ஹார்ட் அட்டாக், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ள தேஜஸ்வி தற்பொழுது வளர்ந்துவரும் கதாநாயகியாக இருக்கின்ற நிலையில் தான் நடிக்கின்ற கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தெலுங்கு ரசிகர்களிடையே நம்பிக்கைக்குரிய கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கவர்ச்சி புகைப்படங்களை
லாக்டவுன் பொது முடக்கம் காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் வீட்டில் முடங்கியுள்ள தேஜஸ்வி, சமூக வலைதளங்களின் மூலமாக பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தி வருகிறார்.

வெப் சீரிஸ்களிலும்
தமிழில் நட்பதிகாரம் 79 திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தொடர்ந்து தமிழில் மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அதேசமயம் பல வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

திரும்ப கூட்டிச் செல்லுங்கள்
சென்ற ஆண்டு இந்நேரம் பல்வேறு இடங்களில் சுதந்திர பறவையாக சுற்றித்திரிந்த தேஜஸ்வி அதை நினைவு கூறும் வகையில் கடலின் அருகிலுள்ள குட்டி சும்மிங் ஃபூலில் பிகினி உடையில் செம ஹாட்டாக ஆனந்த குளியல் போட்டவாறு கடலை சூடேற்றியதோடு இந்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களையும் சூடேற்றி உள்ளார். மேலும் இப்படி ஒரு அசத்தலான த்ரூ பேக் போட்டோவை பதிவிட்டுவிட்டு "என்னை மீண்டும் கடந்த ஆண்டிற்கே திரும்ப கூட்டிச் செல்லுங்கள்" என பீல் பண்ணி கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











