»   »  ஆவணி.. தேஜினி..

ஆவணி.. தேஜினி..

Subscribe to Oneindia Tamil

ஆவணித் திங்கள் என்ற பெயரில் ஒரு மஜாவான படம் தயாராகி வருகிறது.

ராயர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின தயாரிப்பு இது.கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளரான ஹரிகிருஷ்ணா என்பவர்தான் இந்தப் படத்தைஇயக்குகிறார்.

ஸ்ரீகுமார் என்பவர்தான் ஹீரோ. பக்கிரிச்சாமி மாதிரி தாடியும், பீடியுமாககாட்சியளிக்கிறார்.

ஆனால் அவருக்கு ஜோடி போட்டிருக்கும் தேஜினியும், மதுஷாவும் குல்பி ஐஸ்கணக்கில் படு மதமதர்ப்பாக இருக்கிறார்கள்.

குறிப்பாக மதுஷா, சர்க்கரை பாகில் ஊறிய பாதுஷா மாதிரி இருக்கிறார்.

தேஜினி பாப்பாவுக்கு நடிப்பு புதிதில்லை. மும்பையில் நாடக நடிகையாக இருந்தவர்.பல மேடை நாடகங்களில் அரங்கேறிய தேஜினி இந்தியில் நடிக்க முயற்சித்துதோற்றுவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். அவருக்கு இதுதான் முதல் படம்.

படத்துக்கு என்ன இப்படி ஒரு பெயர் என்று ஹரிகிருஷ்ணாவிடம் கேட்டால், தமிழ்மாதங்களில் ஆவணிக்கு முக்கிய சிறப்பு உண்டு. இந்த மாதத்தில்தான் பெரும்பாலும்கல்யாணங்களை, சுப காரியங்களை நிடத்துவார்கள். அப்படி ஒரு புனிதமான,விசேஷமான மாதம் இது.

எனது படத்தின் கதையும் கல்யாணத்தை பின்னணியாகக் கொண்டதுதான்.அதனால்தான் ஆவணித் திங்கள் என்று பெயர் வைத்து விட்டேன் என்கிறார்.

அதாவது ஹீரோ (வழக்கம்போல்) ஒரு அனாதையாம். உறவுகளின் மகிமையைஉணர்ந்த அவன், திருமணம் செய்து கொள்வதன் மூலம் மட்டுமே தனக்கெனஉறவுகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறான்.

இதற்காக ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள தயாராகிறான்.ஆனால் எதிர்பாராதவிதமாக திருமணம் நின்று போகிறது. அதற்கு காரணம்இன்னொரு பெண்.

திருமணத்தை நிறுத்திய அந்தப் பெண் ஹீரோவின் முழுக் கதையை அறிந்துசோகத்தில் மூழ்குகிறார். தன்னால் நின்ற கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காகநாயகனுக்காக தானே பெண் தேடுகிறார்.

ஆனால் கிளைமேக்ஸில் சில டிவிஸ்டு அண்ட் டர்ன்ஸ் அடிக்கிறதாம் கதை.

இதில் கல்யாணப் பெண்ணாகவும், கல்யாணத்தை நிறுத்திய பெண்ணாகவும்மதுஷாவும், தேஜினியும் வருகிறார்கள். தேஜினியை விட மதுஷா தேக பலம்ஜாஸ்தியானவராக தெரிகிறார்.

கிளாமர் உட்டாக காட்சி தரும் மதுஷா, கண்களில் மது குப்பியை போட்டு கவிழ்த்துவைத்துள்ளார். மூக்கும், முழியுமாக படு திரட்சியாக காணப்படும் மதுஷாவைகவர்ச்சி பக்கம் ஜாஸ்தியாக பயன்படுத்தி வருகிகிறார்களாம்.

அதிலும் சாலக்குடியில் எடுக்கப்பட்ட ஒரு பாட்டில், கிளாமர் சாத்துக்குடியைஜூஸாக பிழிந்து கொடுத்துள்ளாராம் மதுஷா.

கண்ணில் தீவிரவாதம் தெரிந்தாலும் ஆட்டத்திலும், நடிப்பிலும் மென்மைகாட்டுகிறாராம். கூட நடித்த ஹரிகுமார்தான் படாதபாடு பட்டு விட்டாராம்.

மதுஷாவுக்கு சற்றும் சளைக்காமல் தேஜினியும் தனது தேக பலத்தை காட்டிரசிகர்களுக்கு தித்திப்பு விருந்தளித்துள்ளாராம்.

உடுமலை, பொள்ளாச்சி, சாலக்குடி என சுற்றிச் சுற்றி படத்தை எடுத்துள்ளார்கள்.

படத்தை ஆவணி மாதமே வெளியிடுகிறார்களாம். ரசிகர்கள் மனதில் ஆணி அடித்துநிற்குமா இந்த ஆவணி?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil