பீலிங்ஸ், அதீத சர்ப்ரைஸ்ல ஆபாச ஆட்டம்.. தெலுங்கு சினிமாவுக்கு வந்த ரெட் அலர்ட்.. என்ன ஆச்சு தெரியுமா?

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் முன்பை விட தற்போது சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் படங்களில் பிரபல நடிகை எவராது ஒருவர் சூட்டை கிளப்பும் அளவிற்கு ஐட்டம் பாட்டிற்கு குத்தாட்டம் போடுவார். தற்போது ராபின்ஹூட் படத்தில் இடம்பிடித்துள்ள அதுதான் சர்ப்ரைஸ் பாடல் கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. மல்லிகை மொட்டு, நடன அசைவுகள் என ரசிகர்கள் பித்து பிடித்து அலைகின்றனர். இந்த சூழலில் இதுபோன்ற பாடல்களுக்கு கட்டுப்பாடு விதிக்க தடை வந்துள்ளது. எங்கே இருந்து தெரியுமா இதனால் தெலுங்கு திரையுலகமே ஆடி போயிருக்கிறது.

இந்திய திரையுலகில் இன்றைக்கு நேற்றல்ல ஐட்டம் சாங் என்பது 60களில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. தற்போது வெளியாகும் படங்களில் கவர்ச்சி அதீதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்போது வெளியான கருப்பு வெள்ளை படங்களிலேயே கவர்ச்சி நிறைந்த பாடல்கள் அதிகம் வந்துள்ளன. கொஞ்சம் அதிகாமகவே கவர்ச்சி இடம்பெற்றிருக்கிறது. ஒரு படத்தில் இடம்பெறும் பாடல் வரிகள் மிகவும் இரட்டை அர்த்தங்கள் நிறைந்ததாக இருந்தாலும் ரசிக்கும் படி இருக்கும் என ரசிகர்களே தெரிவிக்கின்றனர்.

telangana-womens-commission-issues-alert-over-sexy-dance-that-appears-to-be-degrading-to-women

நடிகைகளை கவர்ச்சியாக காண்பிக்கும் வித்தையில் தமிழ் சினிமா தெலுங்கு சினிமாவிடம் கையேந்தி நிற்கே வேண்டும். சும்மா கிடையாதுங்க மாஸ் ஹீரோ படம் என்றால் கண்டிப்பாக ஐட்டம் சாங் இருந்தே ஆக வேண்டும். பிரம்மாண்ட படம் என்று கூறப்படும் பாகுபலி படத்திலேயே மனோகரி என்ற ஐட்டம் சாங் வந்திருக்குன்னா பாருங்க. எஸ்.எஸ்.ராஜமெளி மட்டும் அல்ல புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் பூஜா ஹெக்டே ஜிகிலு ராணி பாட்டில் ஆட்டம் போட்டார். இப்படி லிஸ்ட் அடுக்கி கொண்டே போகலாம்.

படுகவர்ச்சி: ஆனால், அத்தனை பேரையும் தூக்கி சாப்பிட்ட பாடல் என்றால் ஊ சொல்றியா மாமா பாடல்தான். புஷ்பா படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் சமந்தா அப்படி ஒரு கவர்ச்சியில் ஆடியிருப்பார். இந்த பாட்டு பட்டி தொட்டியெங்கும் கலக்கினாலும் ஆண்களை காய்ந்த மாடுபோல் சித்தரிப்பதாக ஆந்திராவை சேர்ந்த ஆண்கள் சங்கம் கொதித்தெழுந்தது. பெண்களை கவர்ச்சியில் ஆட வைத்து ரசிப்பதை ஏற்கலாம், ஆணகளை இழிவுப்படுத்துவதை ஏற்க முடியாது என்பது கூறுவதெல்லாம் ஓவர் என பலரும் கலாய்க்க தொடங்கினர். அதோடு நின்றதா, புஷ்பா 2 படத்தில் சப்புனு அரைவேன்டா, வந்துச்சே பீலிங்ஸ் பாடல் இன்னும் ஓவர் டோஸ் கிளாமர் பாடல் ரகமாக இருந்தது.

telangana-womens-commission-issues-alert-over-sexy-dance-that-appears-to-be-degrading-to-women

பாலய்யா நடனம்: சோஷியல் மீடியாக்களை திறந்தால் இந்த பாட்டின் ரீல்ஸ் தான் அதிகம் இருந்தன. சற்று இழைப்பார நினைத்தாலும் ஐட்டம் பாடல்களின் எண்ணிக்கை அதிகரி்த்துக்கொண்டே போகுது. சென்டிமெண்டான படங்களில் கூட ஐட்டம் சாங் வைத்தால் எப்படிப்பா.. பாலய்யா நடித்த டாக்கு மகாராஜ் படத்தில் இடம்பெற்ற ராவடி பாடலில் பாலய்யா செய்யும் சேட்டைகளை சொல்லவா முடியும். அது ஒரு நடன அசைவாகவே மாற்றிவிட்டனர். தெலுங்கு சினிமா ரசிகர்களும் அதை கொண்டாடி தீர்த்தனர். தமன்னா ஆடிய வா காவாலாயா சாங் உச்சுக்கொட்ட வைத்துவிட்டது. திரை பிரபலங்களையும் ஆக்கிரமித்த பாடலாகவும் மாறியது. எந்த பக்கம் திரும்பினாலும் இதே பாட்டு தான் அதே டான்ஸ்தான் கொட்டி கிடந்தன.

அதுதான் சர்ப்ரைஸ்: கொஞ்சம் ஓய்ந்து ஓய்வெடுக்க நினைத்தாலும் அடுத்ததாக இளைஞர்களையும், திரை ரசிகர்களையும் சூட்டை கிளப்பும் அளவிற்கு தெலுங்கில் நிதின் நடித்துள்ள ராபின் ஹூட் படத்தில் அதுதான் சர்ப்ரைஸ் பாடல் வெளியாகியிருக்கிறது. கெட்டிகா ஷர்மா இப்பாட்டிற்கு மல்லிகை மொட்டு குட்டைப்பாவடையுடன் நடனம் ஆடியுள்ளார். கெட்டிகா ஷர்மா நடனத்தை பார்த்து பலரும் பீவரில் திரிகின்றனர். மந்திரித்து விட்ட கோழிபோல் அந்த பாட்டை ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர். அப்படி என்னதான் சர்ப்ரைஸ் வைத்தாரோ தெரியவில்லை. இப்படி படுகவர்ச்சி நடனத்தால் தெலுங்கு திரையுலகம் வசூலை வாரி குவித்து வந்த நிலையில், அதற்கு தெலங்கானா மகளிர் ஆணையம் கடும் அலர்ட் விடுத்திருக்கிறது.

telangana-womens-commission-issues-alert-over-sexy-dance-that-appears-to-be-degrading-to-women

அலர்ட்: திரைப்படத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக அருவருப்பாக காட்டுவது சரியல்ல.தெலுங்கு திரையுலகில் இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என தெலங்கானா மகளிர் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், அதையும் மீறி இதேபோன்று பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான நடனம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுப்பார்களாம். இது எச்சரிக்கை இல்லை கட்டளை என கடுமையான விமர்சனத்தோடு உத்தரவிட்டிருக்கிறது மகளிர் ஆணையம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X