நடுரோட்டில் டாப்லெஸ் போராட்டம் நடத்த இதுதான் காரணம்... ஸ்ரீரெட்டியின் சர்ச்சை பேட்டி!

சென்னை : பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடுரோட்டில் டாப்லெஸ் போராட்டம் நடத்தியதற்கான காரணத்தை மனவருத்தத்துடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி, நடுரோட்டில் மேலாடையை கழட்டி போராட்டம் நடத்தினார் ஸ்ரீரெட்டி.

மேலும், இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஷால், நடிகர் ராகவா லாரன்ஸ் என கோலிவுட் பிரபலங்கள் பலரின் பெயரையும் ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி

ஸ்ரீ ரெட்டி நடித்திய அரைநிர்வாண போராட்டத்தால், சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமானார். ஆனாலும் இவருக்கு எதிர்பார்க்கப்பட்ட பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் யூடியூப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு டாப்லெஸ் போராட்டம் நடத்தியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

தயாரிப்பாளரை திருப்திப்படுத்தணும்

தயாரிப்பாளரை திருப்திப்படுத்தணும்

அதில், டைரக்டர் எப்படி எல்லாம் என்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அப்படி எல்லாம், இங்க காட்டுங்க, அங்க காட்டுங்க என்று கூறி ஷூட்டிங் எடுத்துவிட்டு அப்புறம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். அதேபோல தயாரிப்பாளருக்கு படுக்கையில் அப்படி காட்டணும், இப்படி காட்டி அவரை திருப்திப்படுத்த வேண்டும்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

படவாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த மாதிரி கஷ்டம் இருக்கிறது என்று சொல்ல எனக்கு வேறுவழி தெரியவில்லை. இதனால், சினிமா வட்டாரத்தில் எல்லாம் என்னை இப்படி பார்த்துவிட்டார்கள், அதனால், நீங்களும் என்னை இப்படியே பார்த்து விட்டு நியாயம் சொல்லுங்க என்று தான் நான் அன்னைக்கு டாப்லெஸ் போராட்டம் நடத்தினேன்.

பலரிடம் ஏமாந்துவிட்டேன்

பலரிடம் ஏமாந்துவிட்டேன்

என்னிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவருமே, பெரிய இயக்குநர்கள், பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய நடிகர்கள், பெரிய கதாசிரியர்கள் தான், யாராவது ஒருவர் என் வாழ்க்கையை மாற்றிவிடுவார்கள் என்று நினைத்து தொடர்ந்து பலரிடம் ஏமாந்து விட்டேன் என்று வருத்தத்துடன் கூறினார்.

திறமைக்கு மதிப்பு இல்லையா?

திறமைக்கு மதிப்பு இல்லையா?

மேலும், நான் டாப்லெஸ் போராட்டம் நடத்தியதற்கு ஒரு காரணம் இருக்கு, கதாநாயகிகளுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். தயவு செய்து ஓவராக கவர்ச்சி காட்டாதீங்க, கதைக்கு தேவை இருந்தால் மட்டுமே கவர்ச்சி காட்டுங்க, ஆனால், பல நடிகைகள் இன்று இசைவெளியீட்டு விழா,போட்டோஷூட் போன்றவற்றுக்கு படுமோசமாக உடை அணிந்து வருகிறார்கள். எல்லாத்தையும் காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்குமா, அப்போ திறமைக்கு மதிப்பே இல்லையா என நடிகை ஸ்ரீ ரெட்டி பல விஷயங்கள் குறித்து மனத் திறந்து பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X