ஒத்துழைக்க மறுப்பு... நயன்தாராவுக்கு தெலுங்கில் நடிக்கத் தடை?
ஹைதராபாத்: நடிகை நயன்தாரா தெலுங்கில் நடிக்கத் தடை விதிக்க, தெலுங்கு திரையுலகினர் முயற்சி எடுத்து வருகிறார்கள்.
தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காத நடிகைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழ் சினிமா.
இதே பாணியைப் பின்பற்றி, தெலுங்கு சினிமா உலகமும் ஒத்துழைப்பு தராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.
முன்பு இலியானா, தான் நடித்த ஜூலாய் என்ற தெலுங்கு படத்தின் விழாவில் பங்கேற்கவில்லை. அந்த படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். இதனால் கடுப்பான இயக்குநர் திரிவிக்ரம் இலியானா வேறு எந்த தெலுங்குப் படத்திலும் நடிக்க முடியாத அளவுக்கு, சக இயக்குநர்களிடம் அவரைப் பற்றி எதிர்மறையாகக் கூறினார்.
மற்ற இயக்குநர்களும் புறக்கணித்துவிட்டதால் இப்போது தெலுங்கில் படங்கள் இல்லாமல், ஹிந்தியில் கிடைக்கிற வேடங்களில் நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் இலியானா.
இப்போது நயன்தாரா. இவர் நடித்துள்ள அனாமிகா படத்தின் இசை - ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு வராமல் புறக்கணித்ததை பெரிய விவகாரமாக்க முடிவு செய்துள்ள இயக்குநர் சேகர் கம்முலா, நயன்தாராவை வேறு எந்த தெலுங்குப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று கூறி வருகிறாராம்.
நயன்தாராவுக்கு தெலுங்கில் நடிக்க தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications












