தமிழில் ராசி இல்லாத நடிகை.. தெலுங்கில் நிதி அகர்வாலுக்காக போட்டிப் போடும் ஹீரோஸ்!
சென்னை: முன்னா மைக்கேல் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நிதி அகர்வால், தெலுங்கில், சவ்ய சாச்சி திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் இவர் நடித்த எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லாததால், கோலிவுட்டில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்தார்.
பளபளக்கும் உடம்பு, பார்த்தவுடன் உச்சு கொட்டவைக்கும் அழகு என ஒட்டுமொத்த அழகுக்கும் சொந்தக்காரியாக இருக்கிறார் நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில், லக்ஷ்மணன் இயக்கத்தில் உருவான பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். விவசாயத்தை மையமாக வைத்து உருவான இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அந்த படத்தை தொடர்ந்து, ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார், இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி என சொல்லப்பட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் மாங்கல்யம் தந்துனானே என்ற பாடல் ஹிட்டடித்தது. ஈஸ்வரன் படத்தில் சிம்பு, நிதி அகர்வால் சேர்ந்து நடித்ததால், இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவியது.

நடிகை நிதி அகர்வால்: அடுத்தாக இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் கலகத்தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை. இதைத் தொடர்ந்து டோலிவுட் பக்கம் சென்ற நிதி அகர்வாலின் படம் நல்ல வரவேற்பை பெற்றன. அண்மையில் நிதி அகர்வாலின் பெயர் பந்தய செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. அவர் விரைவில் காவல்துறையால் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

போட்டி போடும் ஹீரோக்கள்: தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்ற நிதி அகர்வாலுக்கு தெலுங்கு ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு மற்றும் பிரபாஸின் தி ராஜா சாப் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் இந்த நடிகை உச்சத்திற்கே சென்றுவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமில்லாமல், தங்களுடைய படத்தில் நிதி அகர்வாலைத்தான் ஹீரோயினாக போடவேண்டும் என்று இரண்டு இளம் ஹீரோக்கள் தயாரிப்பாளரை டார்ச்சர் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், யார் அந்த ஹீரோ என்பது இன்னும் தெரியவில்லை. தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











