சிவகார்த்திகேயனை தெரியாது.. ராதிகா கேட்டதும் சட்டென சொன்ன ஷாலினி.. தாய் கிழவி ப்ரீமியர் ஃபன்!

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்திருக்கும் படம் தாய் கிழவி. சிவக்குமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதுதான் அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை படம் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று திரையுலக பிரபலங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படம் திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் ஏகபோகத்துக்கு பாராட்டிவருகிறார்கள். ப்ரீமியர் ஷோ முடிந்ததும் ராதிகாவும், ஷாலினியும் சிவகார்த்திகேயனை கலாய்த்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

நடிகராக வென்றுகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் ஜொலிக்கிறார். இதுவரை தரமான படைப்புகளை கொடுத்துவரும் அவர்; தற்போது தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார். ராதிகா, சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், ரேச்சல், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படமானது நாளை ரிலீஸாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் பெற்றிருக்கிறது. ட்ரெய்லரும், க்ளிம்ப்ஸும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ப்ரீமியர் ஷோ: படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் கடந்த சில வாரங்களகவே ஜரூராக நடக்க தொடங்கிவிட்டன. நேற்று திரையுலக பிரபலங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் சூர்யா, ஜோதிகா, ஷாலினி, பிரபு, ராதா, சரத்குமார் என பல செலிபிரிட்டிகள் கலந்துகொண்டு படத்தை பார்த்து ரசித்தார்கள்.

Thaai Kizhavi Premiere Gets Massive Response Radhika and Shalini s Fun Moment with Sivakarthikeyan Goes Viral
Photo Credit:

பாராட்டிய பிரபலங்கள்: படத்தை பார்த்துவிட்டு ராதிகாவின் நடிப்பையும், படத்தையும், இயக்குநர் சிவக்குமார் முருகேசனையும் அனைவருமே கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும்; ராதிகாவுக்கு தேசிய விருது உறுதியாக கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். ப்ரீமியர் ஷோவில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதன் காரணமாக ஒட்டுமொத்த படக்குழுவினரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நிச்சயம் மக்களிடமும் இதேபோன்ற வெற்றியை பெறும் எனவும் அவர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது.

கலாய்த்த ராதிகா, ஷாலினி: இந்நிலையில் சிவகார்த்திகேயனை ராதிகாவும், ஷாலினியும் கலாய்த்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது படத்தை பார்த்து முடித்துவிட்டு வந்த ஷாலினி; ராதிகாவை பாராட்டி கட்டியணைத்தார். அப்போது அங்கே சிவகார்த்திகேயனும் நின்றுகொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஷாலினியிடம் ராதிகா, 'சிவாவை தெரியும்ல' என கேட்க; 'சிவாவை தெரியாதே' என சட்டென சொன்னார். உடனே ராதிகா, 'தெரியாதா? அப்படியே தெரியாமலேயே இருங்கள்' என ராதிகாவும் பதிலுக்கு ஒரே போடு போட்டார். இதை பார்த்த ரசிகர்கள், இரண்டு பேரும் சேர்ந்து எஸ்கேவை இப்படி கலாய்த்துவிட்டார்களே என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

பாராட்டிய கமல்ஹாசன்: முன்னதாக, கடந்த வாரத்தில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனுக்கும் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு பேசிய கமல்ஹாசன், 'இந்தப் படத்தை பற்றி நான் சொல்வதைவிடவும் மக்கள் சொல்வார்கள். சிறப்பான படம்; சிறப்பான இயக்குநர்' என பாராட்டியிருந்தார். இப்படி தாய் கிழவி அனைவரிடமும் மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதால் மக்களும் படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X