ஸ்ரீதேவியோட 2வது கனவும் நிஜமாகப் போகுது.. தல 60 மூலம் தமிழில் அறிமுகமாகும் மயிலு மகள்

தல 60 படத்தில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: போனிகபூர் தயாரிப்பில் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் ஜான்வியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, பாலிவுட்டில் ஹிட் கொடுத்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார் அஜித். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து தல 60 படத்தையும் போனிகபூரே தயாரிக்க, வினோத்தே இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் இறுதியில் ஆரம்பமாக இருக்கிறது.

மகளாக ஜான்வி:

மகளாக ஜான்வி:

சமீபகாலமாக தனது படங்களில் வயதான தோற்றத்தில் நடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அஜித். அந்த வரிசையில் தல 60 படத்திலும் அவர் வயதான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு மகள் கதாபாத்திரம் இருக்கிறதாம். அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஸ்ரீதேவியின் ஆசை:

ஸ்ரீதேவியின் ஆசை:

தமிழில் முன்னணி நடிகையாக இருந்து தான் பாலிவுட்டிற்கு சென்று அங்கும் பிரபலமானார் ஸ்ரீதேவி. தன்னைப் போலவே தனது மகளையும் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தான் அவரது ஆசையாக இருந்தது. அதிலும் குறிப்பாக அஜித் படத்தில் அறிமுகப்படுத்த அவர் விரும்பினார்.

மரணம்:

மரணம்:

ஆனால், அதற்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, ஜான்வி முதலில் இந்தியில் அறிமுகமாகி விட்டார். இதற்கிடையே கடந்தாண்டு துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக குளியல் அறை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். மகளின் முதல் பட ரிலீசைப் பார்க்காமலேயே அவர் மறைந்து விட்டார்.

தல 60:

தல 60:

ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாகத் தான் போனி கபூர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் அஜித். தற்போது , ஸ்ரீதேவியின் இரண்டாவது ஆசையும் நிறைவேறும் வகையில், அஜித் படத்தில் ஜான்வி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் ஜான்வி நடிக்க இருப்பதாக ஒரு வதந்தி வெளியானது. அதேபோல், இதுவும் வதந்தியா அல்லது இல்லை உண்மையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால்தான் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X