தலைவாவில் ரொம்ப சேலஞ்சிங்கான வேடம்... ரொம்ப மெனக்கெட்டு நடிச்சேன்! - அமலா பால்
சென்னை: விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும், மும்பை போலீசாக நடித்தது ரொம்ப சேலஞ்சிங்காக இருந்தது என்றும் அமலா பால் கூறியுள்ளார்.
நேற்று முன் தினம் தமிழகத்தில் தலைவா வெளியாகிவிட்டது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் வாய் திறந்துள்ளார் நாயகியான அமலா பால்.

நடிகர் விஜய் பத்தி சொல்லுங்க...
அவர் மிகவும் எளிமையானவர். முழுமையாக இயக்குநரின் நடிகர். எத்தனை டேக் கேட்டாலும் நடித்துக் கொடுப்பார். இயக்குநரிடம் ஏன் எதற்கு என்று கேள்வியே கேட்க மாட்டார்!

முதல் முதலா போலீஸ் வேடம் போட்டது குறித்து...
அது ஒரு மறக்க முடியாத அனுபவம். முதலில் துறுதுறு பெண்ணா வருவேன். இடைவேளைக்கு அப்புறம் அப்படியே நேரெதிர் கேரக்டர். சீரியஸான போலீஸ் அபீஸரா, அதுவும் மும்பை போலீஸ் ஆபீசரா நடிக்கணும். நான் ரொம்ப மெனக்கெட்டு அந்த பாடி லாங்குவேஜைக் கொண்டுவந்தேன்.

தலைவா ரிலீஸ் ஆகாதப்போ எப்படி பீல் பண்ணீங்க...
நான் ரொம்ப மனசொடிஞ்சி போயிட்டேன். அப்போ ரசிகர்களும் என் நலம் விரும்பிகளும்தான் என்னை தேத்துனாங்க. சமூக வலைத்தளங்கள்ல ஆறுதல் சொன்னாங்க.

நிறைய போட்டி இருக்கே, ஹன்சிகா, சமந்தான்னு...
எனக்கும் இந்தப் போட்டிக்கும் சம்பந்தமே இல்லை. என் இடம் எனக்குத்தான்!


Click it and Unblock the Notifications











