எத்தனை லவ் தெரியுமா?.. இதயம் உடைந்தது.. திருமணம் நடந்தாலும் ஓகே நடக்கலனாலும் ஓகே.. நித்யா மேனன் ஓபன்
சென்னை: மலையாளத்தில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்த நித்யா மேனன் இப்போது தமிழிலும் படு பிஸியாகியிருக்கிறார். அவரது நடிப்பில் நேற்று வெளியான தலைவன் தலைவி திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்ததாக தனுஷுக்கு அவர் ஜோடியாக நடித்திருக்கும் இட்லி கடை படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கேரளாவை சேர்ந்த நித்யா மேனன் அந்த மாநில திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பிறகு ஹீரோயினாக மாறியவர். சிறந்த நடிகை என்ற பெயரை பெற்ற அவர்; தமிழிலும் வெப்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருப்பினும் அவருக்கு சரியாக பிரேக் பாயிண்ட் கோலிவுட்டில் கிடைக்காமல் இருந்தது. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த ஓகே கண்மணி படம்கூட அவருக்கு பெரிதாக க்ளிக் ஆகவில்லை.
திருச்சிற்றம்பலம் நித்யா: இப்படிப்பட்ட நிலைமையில்தான் சில வருடங்களுக்கு முன்பு தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தார். மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருந்த அப்படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அந்தப் படத்துக்காக பெற்றார் நித்யா. அப்போதிருந்து அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் ஏறுமுகமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவன் தலைவி நித்யா மேனன்: அப்படத்துக்கு பிறகு ரவி மோகனுக்கு ஜோடியாக காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தார். தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக இட்லி கடை படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இவை தவிர்த்து விஜய் சேதுபதிக்கு அவர் ஜோடியாக நடித்த தலைவன் தலைவி படம் நேற்று ரிலீஸானது. இதிலும் வழக்கம்போல் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நித்யா.

நித்யா மேனன் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் நித்யா மேனன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தர். அந்தப் பேட்டியில் அவர், "நான் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது எனது பாட்டியிடம் விட்டுவிட்டு அம்மா வேலைக்கு சென்றுவிடுவர். அம்மாவின் இடத்தை எனக்கு பாட்டிதான் நிரப்பினார். நான் மற்றவர்களைவிடவும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பேன். நண்பர்கள் இருக்கிறார்கள்தான். ஆனாலும் தனியாகத்தான் இருப்பேன்.
காதல் அனுபவம் இல்லை: எனக்கு காதல் அனுபவமெல்லாம் இல்லை. எத்தனை முறை காதலில் விழுந்தேனோ அத்தனை முறையும் எனது இதயம்தான் உடைந்துபோனது. எனக்கு ஒரு துணை வேண்டும். அவருடன் அழகான வாழ்க்கை ஒன்றை வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தன. ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கிடைக்கவே இல்லை. அனைத்து உணர்வுகளிலிருந்தும் இப்போது வெளியே வந்துவிட்டேன். வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்துகொள்ளமாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை.
எதுவா இருந்தாலும் ஓகேதான்: நல்ல துணை கிடைத்தால் நாளையே திருமணம் செய்துகொள்வேன். இப்போது எனக்கு இருக்கும் தனிமையே மகிழ்ச்சி தருகிறது. ரத்தன் டாடாவும்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுபோல் நான் தனிமையை ரசிக்கிறேன். திருமணம் நடந்தாலும் மகிழ்ச்சிதான். நடக்கவில்லையென்றாலும் மகிழ்ச்சிதான். ஆன்மீக பாதையை இப்போது நான் பின்பற்றுகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











