நெஜமாவே ‘தளபதி 64’ நாயகிக்கு செம தில் தான் பா.. கடலுக்கு அடியில் என்ன செஞ்சாரு பாருங்க!
சென்னை: தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகவுள்ளன. தளபதி விஜய் ரசிகர்கள் மொத்த பேரும் அந்த அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், தளபதி 64 படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியாவின் அண்டர் வாட்டர் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் புத்தாண்டை கொண்டாடி வரும் ஆண்ட்ரியா, அங்கே கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

நியூ இயர் கொண்டாட்டம்
தளபதி 64 படத்தில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா, தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் தனது நியூ இயர் ஹாலிடேவை கழித்து வருகிறார். புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.
அண்டர்வாட்டர்
இந்நிலையில், தற்போது, கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை ஆண்ட்ரியா ரசிகர்களிடம் இருந்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

ஃப்ரெண்ட்லி ஃபிஷ்
ஆண்ட்ரியாவின் ஸ்கூபா டைவிங் புகைப்படத்தில் அவருக்கு முன்பாக ராட்சத மீன் ஒன்று காணப்படுகிறது. ஆனால், உலகிலேயே இதுதான் ரொம்ப ஃப்ரெண்ட்லி ஃபிஷ் என்றும், இது ஒன்றும் செய்யாது என்றும் நடிகை ஆண்ட்ரியா பதிவிட்டுள்ளார்.

தளபதி 64
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடிகை ஆண்ட்ரியாவும் இணைந்து நடித்து வருகிறார். தளபதி 64 படத்தின் இரண்டாம் பாதியில் தான் நடிகை ஆண்ட்ரியா வருவார் என்ற தகவலும் கசிந்துள்ளது.
நெஞ்சை நிமிர்த்தி
ஆஸ்திரேலியவில் தனது புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வரும் நடிகை ஆண்ட்ரியா, ஸ்கூபா டைவிங் செல்வதற்கு முன்பாக மஞ்சள் நிற டாப் மற்றும் வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிந்து செம செக்ஸியாக நெஞ்சை நிமிர்த்தி வானத்தை பார்க்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

போல்டான நடிகை
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகை ஆண்ட்ரிய மிகவும் போல்டான நடிகை. வடசென்னையில் இயக்குநர் அமீருடன் மேலாடையின்றி அமலா பால் போல்டாக நடித்த காட்சி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி பின்னர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல, தரமணி படத்திலும் மிகவும் போல்டான கதாபாத்திரத்தை ஏற்று ஆண்ட்ரியா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











