மத்தாப்புடன் தீபாவளி வாழ்த்து… செம்ம குஷியில் ’தளபதி 64’ நாயகி!

தளபதி 64 படத்தில் நாயகியாக இணைந்துள்ள நடிகை மாளவிகா மோகனன் மத்தாப்புடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Malavika Diwali Celebration: மத்தாப்புடன் தீபாவளி வாழ்த்து

சென்னை: தளபதி 64 படத்தில் நாயகியாக இணைந்துள்ள நடிகை மாளவிகா மோகனன் மத்தாப்புடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான ரஜினியின் பேட்ட படத்தில் ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா.

ஆரம்பம்

ஆரம்பம்

கேராளாவை சேர்ந்த மாளவிகா மோகனன், தனது கல்லூரி படிப்புகளை மும்பையில் படித்தார். 2013ம் ஆண்டு வெளியான துல்கர் சல்மானின் பட்டம் போலே படத்தில் நாயகியாக அறிமுகமானார். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனன், பீனா மோகனன் தம்பதியினரின் மகள் தான் மாளவிகா மோகனன்.

மஜித் மஜிதி

மஜித் மஜிதி

சில்ட்ரன் ஆஃப் ஹெவன், தி சாங் ஆஃப் ஸ்பேரோ, பியாண்ட் தி க்ளவுட்ஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் மும்பையை சேர்ந்த ஏழை பெண்ணாக நடித்து அசத்தினார் மாளவிகா மோகனன்.

சூப்பர்ஸ்டாருடன்

சூப்பர்ஸ்டாருடன்

மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் தி கிரேட் ஃபாதர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தமிழில் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில், பூங்கொடி கதாபாத்திரத்தில் ரஜினிக்கு தங்கையாகவும், சசிகுமாருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். சின்ன கதாபாத்திரம் என்றாலும், படத்தை தாங்கும் கதாபாத்திரம் என்பதால் மாளவிகா மோகனன் பேட்ட படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

படு கவர்ச்சி

படு கவர்ச்சி

பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சேலை கட்டி குடும்பப்பாங்காக நடித்திருந்த மாளவிகா மோகனனா இவர், என்று தமிழ் ரசிகர்கள் வாய் பிழந்து அதிர்ச்சியாகும் அளவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஃபெமினா ஃபேஷன் திருவிழாவில் கண்கவர் உடையில் படுகவர்ச்சியாக தோன்றி இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார்.

தளபதி 64

தளபதி 64

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு மாளவிகா மோகனன் என்ட்ரி கொடுத்திருந்தாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படம் தான் அவருக்கு சரியான என்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா நடித்து வருவதால், விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகை ஆகியுள்ளார் மாளவிகா.

டபுள் தீபாவளி

நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ள நிலையில், பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார் மாளவிகா. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மத்தாப்புடன் தீபாவளி கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்களும் அவருக்கு தீபாவளி வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X