வாவ்.. இப்படியொரு திறமையா.. ’தளபதி 64’ நாயகிக்கு இருக்கும் ‘தல’ அஜித் திறமை!
சென்னை: 'தளபதி 64' ஃபர்ஸ்ட் லுக் ரிலீசுக்காக தளபதி ரசிகர்கள் காலை முதலே தவமாய் தவம் கிடந்து வருகின்றனர்.
இந்நிலையில், 'தளபதி 64' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிப்பு, கிளாமர் எல்லாத்தையும் தாண்டி 'தல' அஜித் போல போட்டோகிராஃபி திறமையும் மாளவிகா மோகனனுக்கு இருக்கிறது.
ஆப்ரிக்காவில் விடுமுறையை கழித்து வரும் மாளவிகா எடுத்த சிங்கங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி 64 நாயகி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த அவர், அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறவுள்ளார். தளபதி 64 படத்தில் விஜய்சேதுபதியுடன் ஆக்ஷன் காட்சிகளில் இவரும் மோதுகிறார் என்ற தகவல்களும் கசிந்துள்ளன.
நியூ இயர் ஹாலிடே
தளபதி 64 படக்குழுவுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் வெளிநாடுகளில் தங்கள் விடுமுறையை கழித்து வருகின்றனர். ஆப்ரிக்காவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
போட்டோகிராஃபி திறமை
மாளவிகா மோகனன் வெறும் கிளாமர் ஹீரோயின் மட்டுமல்ல திறமையான நடிகையும் கூட, ஆனால், அதை விட அவருக்கு போட்டோகிராஃபி திறமையும் இருப்பது சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பெண் சிங்கம்
சிங்கப்பெண்ணான மாளவிகா மோகனன் ஆப்பிரிக்காவின் தான்சானியா காடுகளில் உள்ள பெண் சிங்கங்களை படம் பிடித்துள்ள புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றன.
சிங்கத்துடன் செல்ஃபி
நியூ இயர் ஹாலிடே கொண்டாட்டத்தை மற்ற நடிகைகள் போல தீவுகளில் பிகினி உடையில் கவர்ச்சியாக கொண்டாடாமல் ஆப்பிரிக்காவில் வைல்டு லைஃப் ட்ரிப் சென்றுள்ளார் மாளவிகா. அங்கே சிங்கங்களை புகைப்படம் எடுத்த மாளவிகா, சிங்கத்துடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











