ஒரே நைட்.. 75,000 ரூபாயை காலி செய்த பூஜா ஹெக்டே.. தளபதி 69 ஹீரோயினின் அட்ராசிட்டி

சென்னை: பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்துவருபவர். கடைசியாக தமிழில் இவர் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் பூஜா ஹெக்டேவின் அழகும், நடிப்பும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இப்போது அவரது நடிப்பில் சூர்யா 44, தளபதி 69 ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் பூஜா ஹெக்டே செய்த விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முகமூடி. ஜீவா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்த சமயத்தில் மிஷ்கின் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்ததன் காரணமாக பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பூஜா ஹெக்டேவும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிக்காமல் போனார். தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வாய்ப்புகள் கிடைத்தன.

pooja hegde thalapathy 69

அடுத்தடுத்த படங்கள்: முகமூடி படத்துக்கு பிறகு ஒக்கா லைலா கொசம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சுமாரான வரவேற்பை பெற்றது. தமிழுக்கு அடுத்து தெலுங்கிலும் அவர் நடித்த படம் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெறாததால் பூஜாவின் கரியர் க்ளோஸ் என்று சிலர் ஆரூடம் கூறினார்கள். ஆனால் எதிர்பார்க்காத விதமாக தெலுங்கில் பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அந்தப் படங்களும் வரிசையாக அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன.

ஹிந்தியில் என்ட்ரி: இதற்கிடையே தனது கரியரின் மூன்றாவது படத்திலேயே பாலிவுட்டுக்கும் சென்றார் பூஜா. பிறகு ஹவுஸ்ஃபுல் 4, ராதேஷ்யாம் (தெலுங்கு, ஹிந்தி) சர்க்கஸ், கிசி கா பாய் கிசி கி ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கிசி கா பாய் கிசி கி ஜான் வீரம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. இருப்பினும் பூஜாவுக்கு ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தவண்ணம்தான் இருக்கின்றன.

பீஸ்ட் ரீ என்ட்ரி: இதற்கிடையே தமிழில் அவர் அறிமுகமானாலும் முகமூடி தோல்விக்கு பிறகு இங்கு தலை காட்டாமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தின் மூலம் அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார். விஜய் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் தனக்கு தமிழில் மறு வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் படமோ தோல்வியடைந்தது.

அடுத்தடுத்த படங்கள்: பீஸ்ட் படம் தோல்வியடைந்தாலும் பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அதன்படி சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் சூர்யா 44, விஜய்யை வைத்து ஹெச்.வினோத் இயக்கவிருக்கும் தளபதி 69 ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் கடந்த வாரம் அவர் தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவர் செய்த செயல் ஒன்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தனக்கு நெருக்கமானவர்களுடன் இலங்கைக்கு சென்றாராம் பூஜா. அங்கு ஒரு ரெசார்ட்டில் தங்கி பார்ட்டி செய்திருக்கிறார். வைல்ட் காஸ்ட் என்ற அந்த ரெசார்ட் காட்டுக்குள் அமைந்திருக்கும் ஒன்றாகும். அங்கு தங்கியிருந்தபடியே வன விலங்குகளை சந்திக்க முடியும். அதேபோல் அருமையான சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவைகளையும் கண்டுகளிக்கலாம். அங்கு தங்குவதற்கு ஒரு இரவு மட்டும் 75,000 ரூபாய் ஆகும் என்கிறார்கள். அங்கு தங்கிதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் பூஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X