ராஷ்மிகா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காத விஜய்.. கோலிவுட்டில் இருந்து போன ‘சுல்தான்’ கார்த்தி!
சென்னை: மும்பையில் இந்தி சினிமா பிரபலங்கள் பங்கேற்க ஒரு ரிசப்ஷன் மற்றும் ஹைதராபாத்தில் டோலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் ஒரு திருமண வரவேற்பு விழாவை ராஷ்மிகா மந்தனா நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், ஒரே ஒரு திருமண வரவேற்பு விழாவில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் வரவழைத்து நேற்று கோலாகலமாக ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கோலிவுட்டில் இருந்து ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்த நடிகர் கார்த்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தார். மேலும், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் போன்ற கோலிவுட் பிரபலங்களும் திருமண வரவேற்பில் பங்கேற்றனர்.
'வாரிசு' விஜய் பங்கேற்கவில்லை: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் கார்த்தியின் சுல்தான் படத்தில் தான் அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் கார்த்தி நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றார். சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம் சரண், மகேஷ் பாபு குடும்பத்தினர், நானி, பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் என ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்த நிலையில், விஜய் பங்கேற்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் பங்கேற்கவில்லை. நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பில் விஜய் பங்கேற்ற நிலையில், ராஷ்மிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனுஷும் பங்கேற்கவில்லை: தமிழ் சினிமாவில் இருந்து ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்த நடிகர் தனுஷும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ராஷ்மிகாவுடன் இணைந்து நடித்த பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்டோரும் கலந்துக்கொள்ளவில்லை என்றும் மும்பையில் நடைபெற்று இருந்தால் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களை ராஷ்மிகா அழைக்கவில்லையா? அவர்கள் புறக்கணித்து விட்டார்களா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.
வெயிட்டான பார்ட்டி: கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருந்து பல சினிமா பிரபலங்கள் ராஷ்மிகா மந்தனா திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நிலையில், நேற்று இரவு வெயிட்டான பார்ட்டியை சினிமா நண்பர்களுக்காக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமண விழாக்கள் நிறைவடைந்த நிலையில், இருவரும் இந்தியாவில் உள்ள பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று கடவுளின் ஆசியை பெறப்போவதாகவும் ஹனிமூனுக்கு ஏதும் இப்போதைக்கு செல்லப் போவதில்லை என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











