‘தாலியே தேவையில்லனு’ ஆட்டம் போட்ட நடிகை பானு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

சென்னை: தாமிரபரணி படத்தில் தாலியே தேவையில்லை என்று ஆட்டம் போட்டு மனதில் இடம் பிடித்த நடிகை இப்போது அடையாளமே தெரியாத அளவிற்கு மொத்தமாக மாறி இருக்கிறார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை முக்தா பானு, மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

thamirabarani movie actress banu latest photos trending on social media

இதையடுத்து, புகைப்படம் என்ற தெலுங்கு படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்தார்.

தாமிரபரணி: இதைத்தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவான தாமிரபரணி என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடியது. இதன் மூலம் பிரபல நடிகை பானு, ரசிகர் மன்றம் , மூன்று பேர் மூன்று காதல் திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் அவ்வளவாக இவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை.

சந்தானத்துடன் ஜோடி: இதையடுத்து, மீண்டும் கேரள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். நீண்ட நாட்களுக்கு பின், 2015 ஆம் ஆண்டு வெளியான வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்கிற படத்தில் சந்தானத்தின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

படவாய்ப்பு இல்லை: இதையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த இவர், கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான சகுந்தலாவின் காதலன் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு பெரிய அளவில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

தாமிரபரணி பானுவா இது: தற்போது குடும்பத்தை கவனித்து வரும் நடிகை பானுவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், தாமிரபரணி படத்தில் நடித்த பானுவா இது என்றும், அடையாளமே தெரியலையே என்றும் ரசிகர்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X