சாய் பல்லவி அதனை பொருட்படுத்தவே இல்லை.. உடல்நிலைக்கு என்னாச்சு?.. இயக்குநர் ஓபன் டாக்
சென்னை: சாய் பல்லவி கடைசியாக அமரன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியை தாண்டி சாய் பல்லவியின் நடிப்பு ஏகத்துக்கும் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவர் ஹிந்தியில் ராமாயணம் படத்தில் நடித்துவருகிறார். மேலும் நாக சைதன்யாவுடன் தண்டல் படத்திலும் நடித்திருக்கிறார்.அந்தப் படம் பிப்ரவரி ஏழாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது.
பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னதாகவே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அதில் அவரால் டைட்டிலை அடிக்க முடியவில்லை. அதற்கு பிறகு அமைதியாக இருந்த அவர் பிரேமம் படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பிரேமம் படத்துக்கு பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியானார் அவர்.

தமிழில் சிறப்பு: மலையாளத்தில் அறிமுகமாகி தமிழுக்கு வந்த தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சாய் பல்லவி கோலிவுட்டிலும் தனது முத்திரை நடிப்பை வெளிப்படுத்தினார். கிளாமர் ரோல் எதுவும் ஏற்காமல் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தெளிவாக இருக்கிறார் அவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் நடித்த படங்களில் சாய் பல்லவியின் கேரக்டர் எப்போதும் முக்கியமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமரன் சாய் பல்லவி: தமிழில் அவருக்கு ஏற்கனவே நல்ல பெயர்தான் இருக்கிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் அந்தப் பெயரை மேலும் உயரத்துக்கு கொண்டு சென்றது. ஒவ்வொரு சீனிலும் சாய் பல்லவியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் ரசித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் முழுவதும் சாய் பல்லவியின் ரோல் சம்பந்தமான ரீல்ஸ்கள்தான் அதிகமாக பரவின. அதுமட்டுமின்றி அமரன் வெற்றியால் சாய் பல்லவியின் சம்பளமும் ஏறியிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் சாய் பல்லவி: இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் கலக்கிவந்த அவர் இப்போது ஹிந்தியிலும் தடம் பதித்திருக்கிறார். அந்தவகையில் அவர் ராமாயணம் என்ற படத்தில் சீதையாக நடிக்கிறார். இப்படத்திலும் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டு; பான் இந்தியா ஹீரோயினாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
தண்டல்: தெலுங்கில் அவர் தற்போது தண்டல் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். நாக சைதன்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். பிப்ரவரி ஏழாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில்; ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சாய் பல்லவி கலந்துகொள்ளவில்லை. மும்பையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர், “சாய் பல்லவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனால் சோர்வடைந்த பல்லவி தற்போது ஓய்வில் இருக்கிறார்” என்றார்.


Click it and Unblock the Notifications











