Malavika mohanan: தங்கலான் ரிலீஸ் குறித்த யோசனையில் காந்தக் கண்ணழகி மாளவிகா மோகனன்!
சென்னை: தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். நடிகர் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இரண்டாவது நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். தொடர்ந்து அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யுடன் இணையும் வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு கைகூடியது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். படத்தில் இவரது கேரக்டரின் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நடிப்பதற்கு அதிகமான ஸ்கோப் இருந்தது. தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் ரஜினி மற்றும் விஜய்யுடன் இணைந்து நடித்து மாஸ் காட்டிய மாளவிகா மோகனின் அடுத்த படத்திலேயே தனுஷுடன் மாறன் படத்தில் இணைந்து நடித்தார்.
தமிழில் குறைவான படங்களிலேயே நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் காணப்படுகிறார். தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் மாளவிகா மோகனன், இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே நிறைவடைந்த நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரியிலேயே இந்த படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் அடுத்தடுத்து தள்ளிப் போகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்க முன்பு படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன்: நடிகை மாளவிகா மோகனன் குறைவான காலகட்டத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து என்ட்ரி கொடுத்திருந்தார் மாளவிகா மோகனன். தொடர்ந்து அடுத்த படத்திலேயே விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு இவரது வீட்டு கதவை தட்டியது. அந்த கேரக்டரையும் சிறப்பாக கொடுத்திருந்தார் மாளவிகா. தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாறன் படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் கலையான விமர்சனங்களை கொடுத்தபோதிலும் தனுசுடன் சேர்த்து மாளவிகா மோகனின் நடிப்பும் பாராட்டுக்கு உள்ளானது.
தங்கலான் பட நாயகி: இந்நிலையில் தற்போது விக்ரம் ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ள நிலையில் படத்தில் மாளவிகா மோகனனுக்கு ஆக்சன் காட்சிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. கடந்த ஜனவரியிலேயே இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் அடுத்தடுத்து தள்ளிப் போகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: தமிழ், மலையாளப் படங்களில் மாஸ் காட்டிவரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்து சிறப்பான போட்டோசூட்களை எடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. அளவான கவர்ச்சியில் இந்தப் புகைப்படங்களில் அவர் காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்களில் மிகுந்த யோசனையுடன் காணப்படுவதாகவும் உள்ளது. மேலும் வெட்கப் புன்னகையுடனான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
போட்டோஷுட் புகைப்படங்கள்: இந்த புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது. யோசனையுடன் மாளவிகா மோகனன் ஒரு புகைப்படத்தில் காணப்படும் நிலையில் தங்கலான் குறித்து அந்த படத்தின் ரிலீஸ் குறித்து தான் அவர் யோசிக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மலையாளத்திலும் சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் மாளவிகா மோகனன். இவர் பிரபல மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











