Malavika Mohanan: செக்க சிவந்த மேனி.. இளசுகளை வளைத்து போட்ட மாளவிகா மோகனன்!

சென்னை: துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான பட்டம் போல என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் கிளுகிளுப்புடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

பேட்ட படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் குறைவான காட்சிகளில் நடித்திருந்தால். விஜய்க்கு ஜோடியாக நடித்ததால், முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இதையடுத்து தனுஷூடன் மாறன் படத்தில் நடித்தார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

Thangalaan heroine Malavika Mohanan glamorous photos trending on social media

சவாலான கேரக்டர்: நடிகை மாளவிகா பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வரும் விக்ரம் இப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தங்கலான் படத்தில் நடித்தது குறித்து பேட்டி அளித்திருந்த மாளவிகா, நான் நடித்ததில் சவாலான படம் தங்கலான் தான் என்றும், இப்படம் எனக்குள் பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது என்றார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: பழங்குடியின மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அழுத்தமான திரைக்கதை அம்சத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இப்படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த மிரட்டலான டீசரை பார்த்த ரசிகர்கள், படம் நிச்சயமாக வேறலெவலில் இருக்கும் என படத்தின் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

அனிமல் 2 படத்தில்: மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வரும் மாளவிகா மோகனன், இந்தியில் யுத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்திலும், ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்க நடிகை மாளவிகா மோகனனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால், மாளவிகா இப்படத்தில் நடிக்க ஒகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

கிளுகிளுப்பான போட்டோஸ்: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனனை இன்ஸ்டாகிராமில் 3.9 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பூட்டும் வகையில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த பேன்ஸ் லைக்குகளை மலை போல் குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X