Malavika Mohanan: இப்பவும் கிளாமரு அள்ளுது.. கிறுக்கு பிடிக்க வைக்கும் மாளவிகா மோகனன் போட்டோஸ்!
சென்னை: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் சிவப்பு நிற புடவையில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல'படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா மோகனன்.

பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
மாளவிகா மோகனன்: பேட்ட படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் குறைவான காட்சியில் நடித்திருந்தால். விஜய்க்கு ஜோடியாக நடித்தால், முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இதையடுத்து தனுஷூடன் மாறன் படத்தில் நடித்தார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

தங்கலான்: சவாலான கேரக்டர்: மாளவிகா பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி உள்ள தங்கலான் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வரும் விக்ரம் இப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தங்கலான் படத்தில் நடித்தது குறித்து பேட்டி அளித்திருந்த மாளவிகா, நான் நடித்ததில் சவாலான படம் தங்கலான் தான். எனக்குள் இப்படம் பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது என்றார்.
வேறலெவல் டீசர்: பழங்குடியின மக்களின் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அழுத்தமான திரைக்கதை அம்சத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இப்படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த மிரட்டலான டீசரை பார்த்த ரசிகர்கள், படம் நிச்சயமாக வேறலெவலில் இருக்கும் என படத்தின் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

ஜொலிக்கும் மாளவிகா: மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் மாளவிகா பிஸியாக நடித்து வரும் மாளவிகா மோகனன், இந்தியில் யுத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனை இன்ஸ்டாகிராமில் 3.9 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











