உடலோடு ஒட்டிய உடை.. படுக்கையில் கண்டபடி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!
சென்னை: மிகப்பிரபலமான சினிமா குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த நடிகை மாளவிகா மோகனன், தமிழில் அறிமுகமான முதல் படமே ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் என்பதால், இவருக்கு கோலிவுட் வட்டாரத்தில் நல்ல பெயர் கிடைத்தது. அந்த படத்தில், சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருந்தார். தங்கலான் படத்தை முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு ,இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் மாளவிகா, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுஷூடன் மாறன் படத்தில் தாரா என்ற கேரக்டரில்,வெறும் பபிள்காமை மென்றுக்கொண்டு ஹீரோயினாக ஒப்புக்கு நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி படத்தில் நடிகர் மேத்யூ தாமஸுடன் இணைந்து நடித்திருந்தார். தன்னை விட சிறு வயதுடையவனை காதலிக்கும் விவகாரமான கதையில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவிற்கு சிறப்பாக ஓடியது.

தங்கலான்: தற்போது இவர், பா ரஞ்சித் இயக்கத்தில் கோலார் தங்க வயல்களில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். பீரியட் திரைப்படமான இப்படத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோடு, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.. இப்படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் பேனரில் படம் தயாராகி வருகிறது.
விரைவில் ரிலீஸ் தேதி: இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்த இப்படத்தின் மீதான எதிர்ப்பு பல மடங்கு அதிகரித்து வந்த நிலையில், விக்ரமனின் பிறந்த நாளுக்கு தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படத்தின் மீதான ஹைப்பை மேலும் அதிகமானது. இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு ஜனவரி இறுதியில் வெளியாகும் என்றனர். ஆனால், இன்றுவரை தங்கலானின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகவில்லை.

மெத்தையில் ஹாட் போஸ்: தங்கலான் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ள மாளவிகா மோகனன் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஓய்வு நேரத்தில் இணையத்தில் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர், உடலோடு ஒட்டிய தங்க நிற உடையில் மெத்தையில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ள மாளவிகாவை அவரது ரசிகர்கள் வர்ணித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











