தாறுமாறு கவர்ச்சியில் தங்கலான் நாயகி!.. இதுக்கு மேல போனா ரசிகர்கள் தாங்க மாட்டாங்க மாளவிகா மோகனன்!
சென்னை: தங்கலான் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமையே சூடாக்கி உள்ளன.
மலையாள ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான மாளவிகா மோகனன் பட்டம் போலே படத்தின் மூலம் ஹீரோயினாக துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர் தற்போது தமிழ் மற்றும் பாலிவுட்டில் பிசியான நடிகையான வலம் வருகிறார்.

சூப்பர்ஸ்டார் படத்தில்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகம் ஆனாவர் மாளவிகா மோகனன். அடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோயின் அந்தஸ்த்தை கொடுத்தது. அதன் பின்னர் தனுஷ் உடன் இணைந்த நடித்த மாறன் படம் ஓடிடியில் வெளியான நிலையில், ஓடாமல் போய் விட்டது. ஆனால், அடுத்த ஆண்டு வெளியாக உள்ள தங்கலான் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கலானுக்கு வெயிட்டிங்: விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். அடுத்த ஆண்டு அந்த படம் வெளியாக உள்ள நிலையில், அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். பாலிவுடிட்லும் யுத்ரா எனும் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் கிளாமர் அள்ளுது: தங்கலான் ஷூட்டிங் முடிந்த நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்து வருகிறார். சமீபத்தில், தண்ணீரில் வெள்ளை நிற உடையை அணிந்து கொண்டு தேவதை போல ஜொலிக்கும் காட்சிகளை வெளியிட்ட அவர் தற்போது லேவண்டர் நிற கவுனை அணிந்துக் கொண்டு மாஸ் காட்டி உள்ளார்.
லேவண்டர் லேடி: கவர்ச்சி கவுனில் கண்ணை பறிக்கும் அழகில் தாராள கிளாமரை காட்டி இளைஞர்களை ஈஸியாக கவர்ந்து வருகிறார் மாளவிகா மோகனன். லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த மேத்யூ தாமஸ்க்கு ஜோடியாக கிறிஸ்டி படத்தில் நடித்த மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை அடுக்கி லைக்குகளை குவித்து வருகிறார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாக உள்ள தங்கலான் படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் மாளவிகா மோகனன்.


Click it and Unblock the Notifications











