பார்வதி பிறந்தநாள்.. தங்கலான் படத்தில் இப்படியொரு ரோலில் நடிக்கிறாரா?.. வெளியானது சூப்பர் போஸ்டர்!
சென்னை: நடிகை பார்வதி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இல்லாமல் தங்கலான் படத்திலிருந்து சிறப்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பர்த்டே ட்ரீட் கொடுத்திருக்கிறது.
கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை பார்வதி அவுட் ஆப் தி சிலபஸ் எனும் படத்தில் 2006-ம் ஆண்டு மலையாளத் துறையில் நடிகையாக அறிமுகமானார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் 2008ம் ஆண்டு அறிமுகமானார்.

சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பார்வதி இந்தாண்டு வெளியாக உள்ள தங்கலான் படத்திலும் நடித்துள்ளார்.
பார்வதி பிறந்தநாள்: கேரளாவில் காலிகட் பகுதியில் பிறந்த நடிகை பார்வதி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிறந்த நடிப்பையும் போல்டான பேச்சையும் வெளிப்படுத்தக்கூடிய பார்வதி தொடர்ந்து முன்னணி நடிகையாக தென்னிந்தியத் திரையுலகில் நட்சத்திரமாக மின்னி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மலையாள நடிகை: 2006-ஆம் ஆண்டு வெளியான அவுட் ஆஃப் தி சிலபஸ் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான பார்வதி தனது திறமையான நடிப்பின் காரணமாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். நோட்புக், வினோத் யாத்ரா, சிட்டி ஆஃப் காட், பெங்களூர் டேஸ், என்னு நின்டே மொய்தின், சார்லி, டேக் ஆஃப், உயரே, ஹலால் லவ் ஸ்டோரி, ஆணும் பெண்ணும், புழு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மரியானை மறக்க முடியுமா?: இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பூ திரைப்படம் பார்வதிக்கு தமிழில் மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்த நிலையில், தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படம் ஆடு ஜீவிதம் படத்துக்கே முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன” பாடலில் எல்லாம் பார்வதியின் அழகை பார்த்து ரசிக்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம்.
தங்கலான் கங்கம்மா: பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் தங்கலான் படம் மூலம் ரசிகர்களை கவர வருகிறார் பார்வதி. பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் கங்கம்மா எனும் கதாபாத்திரத்தில் பார்வதி நடித்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை தங்களால் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

எப்போ ரிலீஸ்?: இந்த ஆண்டு பொங்கலுக்கு தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் சோலோவாக ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்துக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியாக மார்ச் 29 என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் காரணமாக தங்கலான் படமும் ஒரேயடியாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மே அல்லது ஜூன் மாதம் தான் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள படங்கள் எல்லாம் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகி வசூல் ஈட்டி வரும் நிலையில், தமிழ் படங்கள் தேர்தலுக்குப் பிறகு ஒரேயடியாக வெளியானால் ஏகப்பட்ட சிக்கல் ஏற்படும் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











