malavika mohanan: மாலுமா...எங்கள சும்மாவே இருக்க விடமாட்டீங்களா? லைக்குகளை அள்ளும் போட்டோ!
சென்னை: நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்டைப்பார்த்து ரசிகர்கள் விதவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் என்பதால், தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது.

அவர் பேட்ட படத்தில் ரஜினியின் நண்பராக வரும் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த குறைந்த காட்சிகளே வந்தாலும் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக அது இருந்தது.
மாளவிகா மோகனன்: பேட்டை படத்தைத் தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. விஜய்யின் கேரக்டர் மாற்றத்திற்கு இவரே காரணமாக அமைந்திருந்தார். இந்த படத்திலும் இவருக்கு அதிகமான அதிகமான காட்சிகள் இல்லை. இதைத் தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தில் செய்தியாளராக நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் மாளவிகாவிற்கு கைக்கொடுக்கவில்லை.
தங்கலான்: தற்போது மாளவிகா, பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகி உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சொந்த குரலில் டப்பிங்: இந்தபடத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்ததை அடுத்து, தங்கலான் படத்தின் டப்பிங் பணியை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். இதுகுறித்து, வீடியோவை அவர் நேற்று வெளியிட்டு இருந்தார். வசனம் எதுவும் இல்லை அவர் ஆக்ரோஷமாக கத்தும் வீடியோ இணையத்தில் நேற்று வெளியானது.
மாலுமா: இந்நிலையில், தற்போது மெல்லிய சேலையில் முன்னழகும், இடை அழகும் பளிச் என்று தெரியும்படி அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மாலுமா...எங்கள சும்மாவே இருக்க விடமாட்டீங்களா? என கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











