மித்ரன் ஜெயம் ரவி.. மகிமா நயன்தாரா.. சாயிஷா யாரு பாஸ்?
தனி ஒருவன் 2 படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்
சென்னை: தனி ஒருவன் 2 திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன்.

தனி ஒருவன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என எதிர்பார்ப்பு அதிகமானது. ரசிகர்களின் எதிர்பார்ர்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன்ராஜாவும், ஜெயம் ரவியும் அறிவித்தனர்.
தற்போதைய தகவல்படி, இப்படத்தில் அதே ஏஸ்பியாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் வனமகன் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடிபோட்ட சயிஷாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யூ தான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமெனெ ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் சித்தார்த் அபிமன்யூ என்ற வில்லனை அவரால் ஏமாற்றப்பட்ட காதலி சுட்டுக் கொல்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இப்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் அபிமன்யூவுக்கு நிகரான ஒரு வில்லனை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடி மோகன் ராஜாவுக்கு ஏற்பட்டுள்ளது. நெருக்கடியை சமாளித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதே நேரத்தில் ஜெயம் ரவியே ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











