'தனி ஒருவன் 2' படத்திலாவது நயன்தாராவுக்கு நியாயம் கிடைக்குமா?
Recommended Video

சென்னை: தனி ஒருவன் 2 படம் எடுக்கப் போவதாக மோகன்ராஜாவும், ஜெயம் ரவியும் சேர்ந்து கூட்டாக அறிவித்துள்ளனர். இந்த படத்திலாவது நயன்தாராவுக்கு நியாயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மோகன் ராஜா தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து எடுத்த தனி ஒருவன் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படம் ரிலீஸாகி 3 ஆண்டுகள் நிறைவந்துள்ள நிலையில் தனி ஒருவன் 2 படத்தை எடுக்கப் போவதாக மோகன் ராஜா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
தனி ஒருவனை போன்றே அதன் இரண்டாம் பாகத்திலும் நான் தான் ஹீரோ என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி
தனி ஒருவனை போன்றே அதன் இரண்டாம் பாகமும் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். தனி ஒருவன் 2 படத்திலும் நயன்தாராவே ஹீரோயினாக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் பாகத்தில் வில்லன் அரவிந்த்சாமி இறந்தது போன்று காட்டியதால் இரண்டாம் பாகத்தில் அவர் இருக்க மாட்டார் என்று கருதப்படுகிறது.

கோலிவுட்
கோலிவுட்டின் முன்னணி நாயகியான நயன்தாராவுக்கு தனி ஒருவன் படத்தில் சரியான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதை மோகன் ராஜாவே பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டார். மேலும் தனி ஒருவனில் நடந்த தவறு வேலைக்காரன் படத்தில் நடக்காது என்று கூறினார். தான் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய வேலைக்காரன் படத்தில் நயன்தாராவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்தார்.

அதிருப்தி
ஹீரோ அளவுக்கு தூள் கிளப்பும் நயன்தாராவுக்கு வேலைக்காரனில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக இருக்கும் கதாபாத்திரம் அளித்தது அவரின் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எங்கள் நயன்தாராவுக்கு தனி ஒருவனை போன்றே வேலைக்காரனிலும் முக்கியத்துவம் இல்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

இரண்டாம் பாகம்
தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய படங்களில் கிடைக்காத நியாயம் நயன்தாராவுக்கு தனி ஒருவன் 2 படத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனி ஒருவன் 2 படத்தில் யார், யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்ற விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார். அதனால் நயன்தாரா இருக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெற்றி
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படத்தை தன் தோளில் தாங்கி வெற்றி கொடுத்துள்ளார் நயன்தாரா. பெரிதாக மேக்கப் இல்லை, கண்கவர் உடைகள் இல்லை, டூயட் இல்லை, பிரமாண்ட சண்டை காட்சிகள் இல்லை இருப்பினும் தனது முகபாவனையால் படத்தை வெற்றிப்படமாக்கியுள்ளார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











