கமல்ஹாசனுடன் ஜோடி போட்ட நேரம்.. சீரியல்களுக்கு பை சொன்ன ஆஷா சரத்

By Mayura Akilan

சின்னத்திரை உலகத்தில் இருந்து சினிமாவிற்கு ஒரு அழகான நடிகை கிடைத்துள்ளார் அவர்தான் ஆஷா சரத். சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் புது சீரியர்களில் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாபநாசம் படத்தை பார்த்தவர்கள் கமல் நடிப்பை எந்த அளவிற்கு பாராட்டினார்களோ அதே அளவிற்கு போலீசாக நடித்த ஆஷா சரத்தின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

முகத்தில் அப்படி ஒரு எக்ஸ்பிரசன்களை காட்டி வியக்கவைத்திருப்பார். ஆஷாவின் நடிப்பை கமலே வியந்து பாராட்டியதோடு தன்னுடைய அடுத்த படமான தூங்காவனத்தில் தனது மனைவியாகவும் நடிக்க வைத்துள்ளார். இதற்கு மகிழ்ச்சியும் நன்றியும் கூறியுள்ளார் ஆஷா சரத்.

அன்புக்கு நன்றி

அன்புக்கு நன்றி

'பாபநாசம்' திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகியிருக்கும் எனக்கு மிகுந்த அன்புடனும், பிரியமுடனும் வரவேற்பளித்து, வாழ்த்திய தமிழக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆஷா சரத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

தூங்காவனத்தில் ஜோடியாக

தூங்காவனத்தில் ஜோடியாக

தூங்காவனம் படத்தில் கமல் ஜோடியாக நடிப்பது எனக்கு திரில்லாக இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த கமல் சாருக்கு நன்றி, என் ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கும் நன்றி. தொடர்ந்து தனக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

டிவி சீரியல்கள்

டிவி சீரியல்கள்

மலையாளத்தில் குங்குமப்பூவு என்ற டிவி சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆஷா சரத். ஏஷியா நெட் தொலைக்காட்சியில் வெளியான அந்த சீரியலுக்காக சிறந்த நடிகை விருதும் பெற்றுள்ள அவர், பத்துக்கும் மேற்பட்ட மலையாள சீரியல்களில் நடித்துள்ளார்.

திரிஷ்யம்

திரிஷ்யம்

மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் ஐஜி கீதா பிரபாகர் ஆக நடித்து பிரபலமடைந்த அவர், தமிழ், கன்னடத்திலும் ஐ.ஜியாக நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

குவியும் வாய்ப்புகள்

குவியும் வாய்ப்புகள்

மலையாளத்தில் வர்ஷம், ஏஞ்சல்ஸ் படங்களைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் வாய்ப்புகள் வருவதால் சீரியலில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டாராம் சினிமாவில் முழு கவனம் செலுத்தப்போகிறாராம்.

நடுத்தர வயதில் வாய்ப்பு

நடுத்தர வயதில் வாய்ப்பு

35 வயதிற்கு மேல் சீரியல்களிலேயே அம்மா வாய்ப்புதான் கிடைக்கிறது. சினிமாவில் அக்கா, அண்ணி வாய்ப்புதான் கொடுக்கின்றனர். ஆனால் ஆஷாவிற்கு 35 வயதிற்கு மேல்தான் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X