»   »  தனுஜா புகார்: உள்ளே போகிறார் தயாரிப்பாளர்!

தனுஜா புகார்: உள்ளே போகிறார் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் பியாரிலால் குந்தன்ஷா தன்னை ஆட்களை அனுப்பி தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், 2வது கல்யாணம் செய்து கொள்ளுமாறு கூறி மிரட்டிவருவதாகவும் நடிகை தனுஜா சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தனுஜா தன்னை ஏமாற்றி ரூ. 20 லட்சம் வரை மோசடி செய்து விட்டதாக தயாரிப்பாளர் குந்தன்ஷா பரபரப்பு புகார்களைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமாருடன் தனக்குள்ள தொடர்புகளை வைத்து தன்னை அவர் மோசடி செய்து விட்டதாக அவர் புலம்பியுள்ளார். மேலும் நடிகை தனுஜாவுக்குபலருடன் தொடர்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

குந்தன்ஷாவின் பண மோசடி புகாரை தனுஜா மறுத்துள்ளார். அதேசமயம், அமைச்சர் ஜெயக்குமாருடன் தனக்கு தொடர்பு உள்ளதாகவும், அதில் தவறு ஒன்றும் இல்லைஎன்றும் அவர் கூறியுள்ளார்.

இந் நிலையில் மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை தனுஜா சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளார்.

அதில், தன்னை 2வது கல்யாணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து குந்தன்ஷா வலியுறுத்தி வருகிறார். அதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் என்னைப் பற்றிதரக்குறைவாகவும், இழிவாகவும் பத்திரிக்கைகளுக்கு பொய்யான செய்திகளை வெளியிட்டு அசிங்கப்படுத்தப் போவதாக மிரட்டுகிறார்.

அத்தோடு நில்லாமல் எனது வீட்டுக்கு குண்டர்களை அனுப்பி மிரட்டியும் வருகிறார்.

வியாழக்கிழமை அண்ணா நகரில் உள்ள வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றபோது குந்தன்ஷா அனுப்பி வைத்த 3 பேர் என்னைப் பின் தொடர்ந்து வந்தனர்.என்னிடம் ஒரு வாரப் பத்திரிக்க்கையைக் காட்டி, இது போதுமா இல்லை இன்னும் அசிங்கப்படுத்தனுமா என்று கேட்டு விட்டுச் சென்றனர் என்று கூறியுள்ளார் தனுஜா.


ஆணையர் நடராஜ் உத்தரவுப்படி இந்தப் புகாரை திருமங்கலம் உதவி ஆணையர் பாலுச்சாமி விசாரித்து வருகிறார்.

அமைச்சரின் நட்பு தனக்கு இருக்கிறது என்று தனுஜா பகிரங்கமாக அறிவித்துள்ள பின்னணியில், குந்தன்ஷா மீது அவர் கொடுத்துள்ள இந்த புகாருக்கு பெரிய மதிப்புதரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே குந்தன்ஷா விரைவில் உள்ளே தள்ளப்படலாம் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil