ஸ்போர்ட்ஸ் படம்... தமன்னா பயிற்சி... 'தனுசு ராசி' ஹீரோயின் அதிர்ச்சி
சென்னை: விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தில், தமன்னாவுடன் தனுசு ராசி நேயர்களே படத்தின் ஹீரோயினும் நடிக்கிறார்.
ஹரிஷ் கல்யாண், ரெப்பா மோனிகா, முனிஷ்காந்த், யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்த படம், தனுசு ராசி நேயர்களே. சஞ்சய் பாரதி இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார்.

திகாங்கா சூர்யவன்ஷி
இதில் ஹீரோயினாக நடித்தவர், திகன்கனா சூர்யவன்ஷி. இந்தியில் சில படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கிலும் நடித்துள்ளார். இப்போது மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

வெப் சீரிஸ்
கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார் தமன்னா. தமிழில் விஷாலுடன் நடித்த ஆக்ஷன் படத்துக்குப் பிறகு, வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வரும் தமன்னா, இந்த படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

கபடி கோச்
ஸ்போர்ட்ஸ் படமான இதில், பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக வருகிறார் தமன்னா. இதற்காக, பாடி லாங்குவேஜில் இருந்து எல்லாவற்றையும் மாற்ற இருப்பதாகவும் கபடி பற்றி டெக்னிக்கல் அறிவை பெறுவதற்காகப் பயிற்சி பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இந்நிலையில் இதில் புதிதாக இணைந்துள்ளார் திகன்கனா. இவர், அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தை சம்பத் நந்தி இயக்குகிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











