»   »  'தடக் தடக்' தன்யா!

'தடக் தடக்' தன்யா!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
திருடி நாயகி தன்யா, அடுத்து சஸ்பென்ஸ் திரில்லரான தடக் தடக் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

கேரளத்து வரவு தன்யா. திருடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர். கொள்ளை அழகு படைத்த தன்யா, திருடிக்குப் பிறகு எடுபடாமல் போனார். கவர்ச்சி காட்டத் தயாராக இருந்தும் கூட அவரைத் தேடிப் புதுப் பட வாய்ப்புகள் வரவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ரிலீஸான வீரமும் ஈரமும் படத்தில் தலை பிளஸ் உடல் காட்டியிருந்தார் தன்யா. இப்படத்தில் நடித்த ராசியோ என்னவோ தன்யாவைத் தேடிப் புதுப் படம் ஒன்று வந்துள்ளது.

தடக் தடக் என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லரில் நடிக்கிறார் தன்யா. தமிழில் தனக்கென நல்லதொரு இடம் கிடைக்காததால், பந்தா எதுவும் காட்டாமல் யூனிட்டாருடன் பழகுகிறாராம் தன்யா.

தடக் தடக் மூலம் தனக்கு நல்ல திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் படக் குழுவினரோடு தாராளமாக ஒத்துழைக்கிறாராம்.

தன்யாவுக்கு நடிப்பை விட ரொம்பப் பிடித்த இன்னொரு விஷயம், படிப்பாம். எம்.ஏ. சோஷியாலஜி படித்து வரும் அவர் தினசரி பஸ்ஸில்தான் கல்லூரிக்குப் போய் வருகிறாராம்.

அந்த எளிமை காரணமாகவே, படப்பிடிப்புகளின்போது கூட எந்தவித பந்தாவும், அலப்பறையும் செய்யாமல், படு எளிமையாக இருக்கிறாராம். தயாரிப்புத் தரப்பில் என்ன வசதி செய்து தரப்படுகிறதோ அதை முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொள்கிறாராம்.

தன்யா நல்ல நடிகை மட்டுமல்ல நல்ல பெண்ணும் கூட என்று அவரை வைத்துப் படம் எடுத்தவர்கள் சந்தோஷமாக கூறுகிறார்கள்.

தன்யா மனதில் இன்னொரு கணக்கு இருக்கிறதாம். அதாவது தடக் தடக் நன்றாக ஓடினால் தொடர்ந்து நடிப்பாராம். இல்லாவிட்டால் பேசாமல் படிப்பே போதும் என்று கேரளாவுக்கே நிரந்தரமாக திரும்பிப் போய் விடுவாராம்.

இதை நினைத்தால் நமக்கு தடக் தடக் என்றிருக்கிறது.

Read more about: thanya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil