»   »  கடையை மூடுகிறார் தாரிகா

கடையை மூடுகிறார் தாரிகா

Subscribe to Oneindia Tamil

கடை விரித்தும் கொள்வாரில்லை என்ற கதையாக, கவர்ச்சி காட்டத் தயாராக இருந்தும் யாரும்கண்டு கொள்ளாததால் வெறுத்துப்போன தாரிகா சினிமாவை விட்டே விலக முடிவு செய்து விட்டாராம்.

பாரதிராஜாவின் ஈர நிலத்தில் மனோஜின் அண்ணியாக, அடக்க ஒடுக்கமாக வந்த தாரிகா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன்படத்தில் கவர்ச்சி கன்னியாக அவதாரம் எடுத்தார்.

நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு என்ற குத்துப் பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம், தியேட்டர் திரையையே வியர்க்கவைத்தது.

சரி, இன்னொரு கவர்ச்சி ராணி வந்து விட்டார் என்று நினைத்தால் தாரிகாவை ஆளைக் காணோம். பட வாய்ப்புகள் சரியாகவராததால், அதிர்ந்து போன தாரிகா, நமது ஆட்டத்தில் கவர்ச்சிக் குறைவாகி விட்டதோ என்று எண்ணி சில பல முயற்சிகளைமேற்கொண்டார்.

மலையாளத்துக்காரர்கள் கூப்பிட்டு 4 தி பீப்பிள் என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆட விட்டனர். ரயில் மீது தாரிகா போட்டஆட்டம் நம்ம ஊர் ரசிகர்களைத்தான் அதிகம் கவர்ந்தது, மலையாளிகளின் டேஸ்டுக்கு தாரிகாவின் உடல்வாகு ஒத்துவரவில்லை.ஓரம் கட்டி விட்டனர்.

கடுப்பாகிப் போன தாரிகா, தாய் மொழியான கன்னடத்துக்குப் போய்ப் பார்த்தார். அங்கும் சரிவரவில்லை.

திரும்ப சென்னைக்கே வந்து கடை விரித்து உட்கார்ந்து பார்த்தார். ஒருத்தரும் சீண்டவில்லை.

விரக்தியாகிப் போன தாரிகா சினிமாவுக்கே குட்பை சொல்லப் போகிறாராம். என்ன இப்படி என்று தாரிகாவிடம் போய்க்கேட்டால்,

அட போங்க சார், எனது வயசுக்கேற்ற கேரக்டரையே யாரும் கொடுக்கவில்லை. பாரதிராஜா சார் படத்தில் நான் மிகவும்அடக்கமான, கெளரவமான கேரக்டரில் நடித்தேன்.

யாரும் அதை ரசிக்கவில்லை. கவர்ச்சி ஆட்டம் போட்டுப் பார்த்தேன். படம் நன்றாக ஓடியும் எனக்கு வாய்ப்புகள் வரவில்லை.

ஹீரோயின் வேடத்திற்கு முயற்சி செய்தேன். அதுவும் சரிவரவில்லை, கவர்ச்சியும் எனக்குக் கை கொடுக்கவில்லை. இதற்கு கீழும்போக என்னால் முடியாது, அப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவேதான் குட்பை சொல்ல முடிவு செய்து விட்டேன் என்கிறார் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க.

அடடா, வல்லியதொரு குட்டியை இழக்கப் போகிறோமா? அட கவலையை விடுங்க, டிவி பொட்டி இருக்கு, அங்கபார்த்துக்கலாம் தாரிகாவை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil